ஒரு மாத விடுமுறைக்கு பின், சட்ட கல்லூரிகள், வரும், 15ம்
தேதி திறக்கப்படுகின்றன. தேர்வுகள், இரு வாரங்களுக்கு தள்ளி
போகிறது.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவம்,
பொறியியல், சட்டம் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், மார்ச், 9ம்
தேதி, போராட்டங்களை துவங்கினர்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கலை
அறிவியல் மற்றும் சட்ட கல்லூரிகள், மார்ச், 15ம் தேதியும், பொறியியல்
கல்லூரிகள், 18ம் தேதியில் இருந்தும், கால வரையின்றி மூடப்பட்டன. மருத்துவ
கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.கல்லூரிகள் மூடிய நிலையிலும்,
மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள்,
ஏப்ரல் மாதம் துவங்க உள்ள நிலையில், மூடப்பட்ட கல்லூரிகளைத் திறக்க
வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்து
வந்தனர்.போராட்டங்கள் இயல்பு நிலைக்கு வந்ததையடுத்து, ஏப். 3ம் தேதி,
பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளை திறக்க, அரசு உத்தரவிட்டது.
ஆனால், சட்ட
கல்லூரிகள் குறித்து, எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. ஒரு மாத விடுமுறைக்கு
பின், வரும், 15ம் தேதி முதல், அரசு சட்ட கல்லூரிகளை திறக்க, கல்லூரி
முதல்வர்களுக்கு, அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து சட்ட
பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வின்சென்ட் காமராஜ் கூறுகையில்,
""வரும், 15ம் தேதி சட்ட கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், மே, 2ம் தேதி
நடக்க இருந்த தேர்வுகள், மே, 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகின்றன.
மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலமும் நீடிக்கப்பட்டுள்ளது,''
என்றார்.
No comments:
Post a Comment