பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், அனைத்து கேள்விகளும் எளிமையாக
இருந்ததால், அதிகம் பேர் 100 மார்க் பெறுவார்கள் என மாணவர்கள், ஆசிரியர்கள்
மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
* எம்.கோகுல், மாணவர், நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி: அனைத்து கேள்விகளுமே எளிமையாக இருந்தன. ஒரு மார்க் கேள்விகளில் இரண்டு கேள்விகள் மட்டுமே ""புக் இன்''இல் இருந்து (பாடத்திற்குள் இருந்து) கேட்கப்பட்டிருந்தன. மற்ற அனைத்து கேள்விகளுமே, ""புக்பேக்''கில் (பாடத்திற்குரிய கேள்விகளில்) இருந்து கேட்கப்பட்டிருந்தன.
குறிப்பாக 2 மார்க் கேள்விகள், காலாண்டு, அரையாண்டு கேள்வித்தாள்களில் இருந்தும், கடந்த ஆண்டுக்குரிய கேள்வித்தாள்களில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன. ஓரிரு கேள்விகள் மட்டுமே புளூ பிரின்டிற்கு மாறாக, ஆனாலும் எளிமையான முறையில் கேட்கப்பட்டிருந்தன. மற்ற கேள்விகள் அனைத்தும் புளூ பிரின்டில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. இதனால் அதிக மாணவர்கள் 100 மார்க் பெறுவது உறுதி.
*எம்.தீபா, மாணவி, பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி: வழக்கமாக ஒரு மார்க் கேள்விகளில், 13 கேள்விகள் எளிமையாகவும், இரண்டு கேள்விகள் கடினமாகவும் இருக்கும். ஆனால் இம்முறை அத்தனை கேள்விகளுமே எளிமையாக இருந்தன. புத்தகத்தில் இருந்து கேள்வி பதில்களை படித்த சுமாரான மாணவர்கள் அத்தனை பேரும் அதிக மார்க் பெற
முடியும்.
கணக்கு பாடத்தில் கேள்விகள் கடினமாக இருந்ததால், அறிவியல் பாடம் எப்படியிருக்குமோ, என பயந்த மாணவர்கள், கணக்கில் குறைந்த மார்க்கை அறிவியலில் ஈடுகட்டி விட முடியும்.
*கே.எஸ்.கலா, ஆசிரியை, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை:
அறிவியல் பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண்கள் பெறுவது எளிது. ஒரு மதிப்பெண், இரண்டு, ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்துமே புத்தகத்தில் பின்புறமுள்ள கேள்விகளாக கேட்கப்பட்டன. கேள்விகள் சுற்றி வளைத்து கேட்கப்படாமல், எளிமையாக இருந்தது. மறைமுக கேள்விகளே இல்லை. வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கணக்கு, புத்தகத்தின் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. கார்பன் பண்புகள் கேள்வி, கணக்கு இரண்டுமே மாணவர்கள் எழுதி பார்த்தது தான். இயற்பியல், உயிரியல் பாடங்களும் கடினமாக இல்லாததால், மாணவர்கள் நூறு மதிப்பெண் பெற நல்ல வாய்ப்புள்ளது.
முன்னாள் தலைமை ஆசிரியர் வி.சுப்ரமணியன்: முதல், இரண்டாம் திருப்புதல் தேர்வுகளின் போது கேட்கப்பட்ட வினாக்களில், 70 சதவீத வினாக்கள் இடம்பெற்றதும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பாக உள்ளது. அதே சமயம் ஆங்கில வழி மாணவர்களுக்கான, ஒரு இயற்பியல் வினாவுக்கு மட்டும் சரியான விடை தரப்படவில்லை.
ஒரு மதிப்பெண் வினாவில் 14வது வினா, "ஒரு கம்பிச் சுருளுடன் தொடர்புடைய காந்தம் பாயம் மாறும்போதெல்லாம், அச்சுற்றில் மின்னியக்கும் விசை உருவாகும் நிகழ்வு...? என்ற வினாவிற்கு தமிழ் மாணவர்களுக்கு, 4 விடைகள் தரப்பட்டுள்ளன. அதில் அ) மின்காந்த தூண்டல் என்பது சரியான விடை. இது வினாத்தாளில் உள்ளது.
ஆனால் ஆங்கில வழி மாணவர்களுக்கு விடை அதில் இல்லை. இதற்கு சரியான விடை "எலக்ட்ரோ மேக்னடிக் இண்டக்ஷன்' என்பது. ஆனால் அது இடம்பெறவில்லை. மாறாக, வெறும் "மேக்னடிக் இண்டக்ஷன்' என தரப்பட்டுள்ளது. அது சரியானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment