இந்தியா மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றிலும், ஆற்றல் மற்றும் எரிவாயு
துறையானது, பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. உலகளாவிய போட்டியானது,
அனைத்து ஆற்றல் மற்றும் எரிவாயு அமைப்புகளையும், தங்களின் மேலாண்மை திறனை
மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு மேலாண்மை
துறையில் வழங்கப்படும் எம்.பி.ஏ., படிப்புஇ வியூக மற்றும் மேலாண்மையில்,
ஒருவரின் மேம்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள மட்டும் உதவுவதில்லை. மாறாக,
ஆற்றல் மேலாண்மைக் குறித்த ஆழமான அறிவையும், சமூக, அரசியல், பொருளாதார,
கலாச்சார மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான ஒரு புரிந்துணர்வை
தருவதோடு, இத்தகைய அறிவையும், புரிந்துணர்வையும், முடிவெடுக்கும்
செயல்பாட்டில் சிறப்பாக பயன்படுத்துவதற்குரிய திறனையும் அளிக்கிறது.
ஒரு வெற்றிகரமான ஆற்றல் மேலாளராக ஒருவர் மிளிர்வதற்குரிய மேம்பட்ட வணிக,
மேலாண்மை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை சிறப்பாக வழங்கும்பொருட்டு, இந்த
எம்.பி.ஏ., படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், நல்ல பணி நிலையை எதிர்பார்க்கும்
இடைநிலை மற்றும் சீனியர் மேலாளர்களுக்கு இந்தப் படிப்பு ஒரு ஏற்ற
அம்சமாகும்.
இப்படிப்பினுடைய பாடத்திட்டத்தின் விரிவுத்தன்மை, படிக்கும் முறை
மற்றும் பணி வாய்ப்புகள் ஆகியவற்றால், எண்ணெய் மற்றும் எரிவாயு
மேலாண்மைக்கான எம்.பி.ஏ., படிப்பு, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக
திகழ்கிறது.
இப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள்
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன், இளநிலைப் பட்டப்படிப்பை
முடித்திருக்க வேண்டும். மேலும், இளநிலை இறுதியாண்டு படிக்கும்
மாணவர்களும், இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். கேட்(CAT) தேர்வெழுதும்
மாணவர்களும், இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் இதற்கான வேலை வாய்ப்புகள்
எண்ணெய் மற்றும் எரிவாயு மேலாண்மையில் எம்.பி.ஏ., படிப்பை
முடித்தவர்களுக்கு, பெட்ரோலியத் துறையில், ஏராளமான வேலைவாய்ப்புகள்
காத்துக்கொண்டுள்ளன. இப்படிப்பை,வெற்றிகரமாக நிறைவுசெய்த ஒருவர், மேலாளர்
அல்லது எக்ஸிகியூடிவ் நிலையிலான பணித் தகுதி வாய்ப்புகளைப் பெறலாம்.
இதன்பிறகு, ஒரு நிறுவனத்தின் உட்சபட்ச பதவியையும் ஒருவர் அடையலாம்.
பெட்ரோலியம் மற்றும் எரிவாயு தொடர்பான நிறுவனங்கள் தொடரந்து அதிகரித்து
வருவதால், இப்படிப்பிற்கான பணி வாய்ப்புகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம்
உள்ளன.
எண்ணெய் மற்றும் எரிவாயு மேலாண்மைக்கான எம்.பி.ஏ., படிப்பு, எதிர்கால
மேலாளர்களை உருவாக்கி, அவர்களை, சம்பந்தப்பட்ட தொழிலுக்குத் தேவையான முழு
தகுதியுடையவர்களாக மாற்றும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
பெட்ரோலியம் மற்றும் அது தொடர்பான வாயு பொருட்களை, கண்டுபிடித்தல்
மற்றும் விற்பனை செய்தலின் Hydrocarbon value chain செயல்பாட்டில், வியூக
ரீதியிலான வணிக விழிப்புணர்வுத் திறனை இப்படிப்பு மேம்படுத்துகிறது.
கண்டுபிடித்தல் மற்றும் தயாரித்தல், பைப்லைன் நடவடிக்கைகள்,
சுத்திகரித்தல், சேகரித்தல் மற்றும் டெர்மினல்கள், எல்.என்.ஜி.,
டெர்மினல்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல், ஆராய்ச்சி
மற்றும் மேம்பாடு ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில், மேற்கண்ட
எம்.பி.ஏ., படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் குவிந்து
கிடிக்கின்றன.
வெளிநாட்டு வாய்ப்புகள்
இந்தியாவில் படித்த சுமார் 30% பெட்ரோலியம் பொறியாளர்கள், தற்போது,
வெளிநாட்டில்தான் பணியாற்றுகிறார்கள். பொதுவாகவே, மாணவர்கள், British Gas,
Schlumburger போன்ற பிரபல வெளிநாட்டு பெட்ரோலிய நிறுவனங்களில் பணிபுரிவதையே
விரும்புகிறார்கள். ஏனெனில், அதுபோன்ற நிறுவனங்களில் தரப்படும் சம்பளம்
மிகவும் அதிகம்.
வேலைவாய்ப்பை வழங்கும் சில முக்கிய இந்திய நிறுவனங்கள்
* இந்தியன் ஆயில்
* ரிலையன்ஸ் எனர்ஜி
* ரிலையன்ஸ் எனர்ஜி
இப்படிப்பை வழங்கும் இந்தியாவின் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
* ஐ.ஐ.ஐ.டி., - புனே
* பெட்ரோலியம் மற்றும் ஆற்றல் படிப்புகளுக்கான பல்கலைக்கழகம்(UPES) - டெஹ்ராடூன்
* பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம் - காந்திநகர்
* அமெட் பல்கலைக்கழகம்
* பெட்ரோலியம் மற்றும் ஆற்றல் படிப்புகளுக்கான பல்கலைக்கழகம்(UPES) - டெஹ்ராடூன்
* பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம் - காந்திநகர்
* அமெட் பல்கலைக்கழகம்
இப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் அடங்கியுள்ள சில பொதுவான அம்சங்கள்
· Economics and Management Decisions
· Quantitative Techniques
· Business Communication Negotiation Skills
· Organizational Behavior
· Fundamentals of Oil and Gas Business
· Fundamentals of Petroleum Exploration
· IT Applications in Petroleum Sector
· Petroleum Industry Accounting
· Operations and Material Management
· Marketing Management
· Research Methodology and Applied Statistics
· Human Resource Management
· Understanding of Natural Gas Business
· Petro-Economics
· Fundamentals of Refining
· Petroleum Financial Management
· Industrial Visits
· Project Management and Contract Administration
· International Business Management
· Business Policy and Strategy
· Econometrics
· POL: Retailing
· Understanding Petro Chemical Business
· Supply Chain and Logistics for Petroleum Industry
· Financing Petroleum Sector Projects
· Summer Internship
· Dissertation 1
· E-Enterprise Management
· Petroleum Law and Policy
· Health, Safety and Environment for Petroleum
· Dissertation 2.
· Quantitative Techniques
· Business Communication Negotiation Skills
· Organizational Behavior
· Fundamentals of Oil and Gas Business
· Fundamentals of Petroleum Exploration
· IT Applications in Petroleum Sector
· Petroleum Industry Accounting
· Operations and Material Management
· Marketing Management
· Research Methodology and Applied Statistics
· Human Resource Management
· Understanding of Natural Gas Business
· Petro-Economics
· Fundamentals of Refining
· Petroleum Financial Management
· Industrial Visits
· Project Management and Contract Administration
· International Business Management
· Business Policy and Strategy
· Econometrics
· POL: Retailing
· Understanding Petro Chemical Business
· Supply Chain and Logistics for Petroleum Industry
· Financing Petroleum Sector Projects
· Summer Internship
· Dissertation 1
· E-Enterprise Management
· Petroleum Law and Policy
· Health, Safety and Environment for Petroleum
· Dissertation 2.
No comments:
Post a Comment