பி.எட்., படிப்பிற்கு, நேற்றுடன், 9,000 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும்
கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும்,
தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.
இப்படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம், சென்னை, சைதாப்பேட்டை, கல்வியியல்
மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல்
மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட, 13 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களிலும்,
கடந்த, 9ம் தேதி துவங்கியது. நேற்றுடன், ஐந்து நாள் முடிவில், 9,000
விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.
இதுகுறித்து, பி.எட்., மாணவர் சேர்க்கை செயலர் பரமேஸ்வரி கூறுகையில்,
"வரும், 16ம் தேதியோடு, விண்ணப்ப வினியோகம் முடிவடைய உள்ளது. 13 ஆயிரம்
விண்ணப்பங்கள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கிறோம்" என்றார்.
No comments:
Post a Comment