இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக, நடப்பாண்டு, 5.65 லட்சம்
மடிக்கணினி வாங்க, எல்காட் நிறுவனம் சார்பில், டெண்டர் விடப்பட்டு உள்ளது.
மடிக்கணினி, எல்காட் நிறுவனம் சார்பில்
வாங்கப்பட்டு, கல்வித் துறை மூலம், மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல், கோவில் செயல் அலுவலர்களுக்கும், மடிக்கணினி வழங்கப்பட்டு
உள்ளது. இத்திட்டங்களுக்காக, 2011-12, 8.98 லட்சம், கடந்த ஆண்டு, 7.55
லட்சம் மடிக்கணினிகள் வாங்கப்பட்டன. நடப்பாண்டுக்கு, 5.65 லட்சம்
மடிக்கணினி வாங்க முடிவு செய்யப்பட்டு, எல்காட் நிறுவனம் சார்பில், டெண்டர்
விடப்பட்டுள்ளது.
டெண்டர் விண்ணப்பப் படிவங்கள், சென்னை நந்தனம் பகுதியில் உள்ள, எல்காட்
மேலாண் இயக்குனர் அலுவலகத்தில், அடுத்த மாதம், 3ம் தேதி வரை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, செப்., 4ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment