"மாணவர்கள் படிக்கும்காலத்தில் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கொள்ள வேண்டும்," என சென்னை உளவியல் நிபுணர் ரகுநாத் பேசினார்.
ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி பி.எம்.சி., டெக் இன்ஜினரிங்
கல்லூரியில் பி.இ., மற்றும் பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான
வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி செயலாளர் குமார் பேசினார்.
அப்போது அவர், "உலகம் திறமையான இன்ஜினியர்களை எதிர்பார்க்கிறது. அதற்கு
இன்ஜினியரிங் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும். தங்களை எப்படி தயார் செய்து
கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் பங்கு இந்த
நாட்டிற்கு மிகவும் அவசியம். இன்ஜினியர்கள் இயற்கை வளங்களை அழிக்காமல்
எதிர்கால சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும்," என்றார்.
சென்னை உளவியல் நிபுனர் ரகுநாத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "மாணவ சமுதாயத்திடம் இந்த உலகத்திற்கு தேவையான
அனைத்து தேவைகளும், திறமைகளும் புதைந்து கிடக்கிறது. மாணவர்கள் அந்த
திறமையை கண்டறித்து தொடர் பயிற்சி பெற்றால் வாழ்வில் முன்னேறலாம்.
படிக்கும் காலத்தில் மனதில் ஏற்படும் தீய எண்ணங்கள், பழக்கங்களை அடையாளம்
கண்டு அவற்றை மூட்டை கட்டி வைத்து விட வேண்டும். கல்லூரி நாட்களில்
மாணவர்கள் படிப்பு ஒன்றே குறிக்கோளாக நினைக்க வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment