"கல்வித் தகுதியுள்ள சத்துணவு உதவியாளர், சமையலர் அனைவருக்கும்
அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என,
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு, கோவை தாமஸ் கிளப்பில்
நடந்தது. மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து தலைமை வகித்தார். கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தில், 30 ஆண்டுகளாக தொகுப்பூதியம்,
மதிப்பூதியம், வரையறுக்கப்படாத ஊதியம் வழங்கப்படுகிறது. சத்துணவு ஊழியர்களை
பணிவரன் முறைப்படுத்தி, அமைப்பாளருக்கு 5,200 ரூபாய், சமையலர்,
உதவியாளர்களுக்கு 4,800 ரூபாய் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
கல்வித் தகுதியுள்ள சத்துணவு உதவியாளர், சமையலர் அனைவருக்கும்
அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மலைப்பகுதியில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு மலைப்படி,
குளிர்காலப்படி வழங்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போன்று சத்துணவு ஊழியர்களுக்கு
மாதம் 3,050 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விருப்ப ஓய்வு, மருத்துவ
காரணங்களில் ஓய்வு பெறும் போது, ஓய்வு கால பலன்கள் அனைத்தையும் வழங்க
வேண்டும்.
சத்துணவு மையத்திற்கு வழங்கப்படும் சில்லறை செலவினத்தொகை 20 ரூபாய்
என்பதை உயர்த்தி, 200 ரூபாய் வழங்க வேண்டும். வாரம் ஐந்து முட்டை,
உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு போன்றவற்றை வேகவைக்க எரிபொருள்
மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment