பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சு, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் பேச்சாற்றலையும்
படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்கிடையே பேச்சு, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்த தமிழ்
வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் வரும்
ஆக.21ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், ஆகஸ்ட் 23ம் தேதி கல்லூரி மாணவ,
மாணவிகளுக்கும் அந்தந்த மாவட்ட அளவில் போட்டி நடைபெறும்.
கவிதைப்போட்டி காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரையிலும், கட்டுரைப்
போட்டி பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையிலும், பேச்சுப் போட்டி பகல் 2.30
மணி முதல் நடைபெறும்.
விதிமுறைகள்: கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக்
கல்லூரிகள், பல் தொழில் நுட்பக் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், கால்நடை
மருத்துவக் கல்லூரிகள், பிற கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இப்போட்டியில்
பங்கேற்க தகுதியடையவர்கள். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் தலைமை
ஆசிரியர், கல்லூரி முதல்வரின் கையெழுத்துடன் சான்றிதழ் பெற்று வர வேண்டும்.
மூன்று போட்டிகளிலும் ஒரு மாணவரே பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கபரிசு வழங்கப்படும். இவ்வாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment