டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக, மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், தளியைச்
சேர்ந்த அசோக்குமார் என்பவர், எஸ்.பி., ஆஸ்ரா கர்க்கிடம் புகார்
கொடுத்தார். எஸ்.பி., உத்தரவின்படி டி.எஸ்.பி., தலைமையிலான தனிப்படை
போலீசார் டாஸ்மாக் ஊழியர் இருவர் உட்பட ஆறு பேரை, 17ம் தேதி கைது செய்தனர்.
வினாத்தாள் மோசடி தொடர்பாக, நேற்று முன்தினம், 10 பேரிடம் போலீசார்
விசாரணை நடத்தினர். அவர்களில் ஐந்து பேருக்கு தொடர்பு இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை செய்ததில்,
டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வில், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாக்களில்
பெரும்பாலான வினாக்கள் தேர்வில் வந்துள்ளது தெரியவந்து உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள சில அலுவலர்களும், போலீஸ் விசாரணை
வளையத்திற்குள் வரவுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை
ஒரு பெண் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment