"ஆசிரியர்
தேர்வு வாரியம் நடத்தும் டி.இ.டி., தேர்வு பணிகளை முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்,'
என, பட்டதாரி ஆசிரியர்கள் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
ஆக., 17
மற்றும் 18ல் டி.இ.டி., தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான பணி ஒதுக்கீட்டு
முறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ் முதுகலை ஆசிரியர்களுக்கு பணிகள்
ஒதுக்கப்பட்டதால், தேர்வு பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை ஆசிரியர்கள்
அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் பட்டதாரி ஆசிரியர்கள்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவதாகவும்
கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர்
இளங்கோவன் தெரிவித்துள்ளதாவது: டி.இ.டி., தேர்வுகள் இரு நாட்களே உள்ள
நிலையில் முதுகலை ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தேர்வு
எழுதவுள்ளவர்களின் மனநிலையை பாதிக்கும். அரசு நெறிமுறைக்கு ஏற்ப உரிய
முறையில் பணிகளை ஒதுக்கி அறிவித்துள்ளது.
இதை முதுகலை ஆசிரியர்கள்
புறக்கணித்தால், அவர்களுக்கும் சேர்ந்து அப்பணிகளை பட்டதாரி ஆசிரியர்களே
முழுமையாக ஈடுபட்டு, தேர்வுகளை நடத்தி முடிக்க முடிவு தயாராக உள்ளோம்,
என்றார்.
உயர்நிலை தலைமை ஆசிரியர், தமிழாசிரியர், உயர்நிலை மேல்நிலை
பட்டதாரி ஆசிரியர் கழகங்களில் நிர்வாகிகள் பால்தாஸ், கிறிஸ்டோபர் ஜெயசீலன்,
ஜெயக்கொடி, நவநீதகிருஷ்ணன், வெங்கடேஷன் ஆகியோர் கூட்டறிக்கை:அரசு
விதிப்படி, அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களை துறை அலுவலர்களாகவும், பட்டதாரி
ஆசிரியர்களை கூடுதல் துறை அலுவலர்களாகவும் நியமித்துள்ளனர். தனியார் பள்ளி
முதுகலை ஆசிரியர்களுக்கு அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது
சரியான முடிவே. கடைசி நேரத்தில், முதுகலை ஆசிரியர்கள் பணிகளை
புறக்கணித்தால் பட்டதாரி ஆசிரியர்கள் அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவார்கள்,
என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment