பி.எட்., படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, நேற்று துவங்கியது. ரம்ஜான்
பண்டிகை என்பதால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில்
கூட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல்
கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட
தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும்
கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்ப
வினியோகம், சென்னை, சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்;
திருவல்லிக்கேணி, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய
நிறுவனங்களில் நேற்று துவங்கியது.
திண்டுக்கல் காந்தி கிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி; சேலம்
பேர்லாண்ட்ஸ் ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரி; மதுரை தியாகராசர் பர்செப்டார்
கல்லூரி; தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி; பாளையங்கோட்டை
செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி.
திருவட்டார், ஆற்றூர் என்.வி.கே. எஸ்.டி., கல்வியியல் கல்லூரி;
குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக் கோட்டை, கோவை, வேலூர் அரசு கல்வியியல்
கல்லூரிகள் ஆகிய, 13 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களிலும் துவங்கியது.
16ம் தேதி வரை வரும், 16ம் தேதி வரை, விண்ணப்ப விற்பனை நடைபெறுகிறது.
சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் விண்ணப்பம் வினியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், வரும் 16ம் தேதிக்குள், "செயலர், தமிழ்நாடு
பி.எட்., சேர்க்கை - 2013, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு
நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை- 5" என்ற முகவரிக்கு
அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment