அரசு வழங்கும் இலவச திட்டங்களை, பள்ளி மாணவர்களுக்கு, முறையாக வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில், லேப்-டாப், நோட்டுப் புத்தகம், சீருடை, காலணி,
கணித உபகரணம், புத்தக பை உட்பட, 14 நலத்திட்டப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு, வகுப்பு துவங்கும் முன், நலத்திட்டப் பொருட்கள், பள்ளிகளுக்கு
அனுப்பப்பட்டன. அவற்றை, மாணவர்களுக்கு முறையாக வழங்கவில்லை என, பள்ளி
நிர்வாகங்கள் மீது, புகார்கள் வந்தன.
இதையடுத்து, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
கலந்து கொண்ட, ஆலோசனை கூட்டத்தை, கல்வித்துறை, அனைத்து கல்வி
மாவட்டங்களிலும் நடத்தியது. கூட்டத்தில், பள்ளிகளில் வழங்கப்படும்
நலத்திட்ட உதவிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர்கள், எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும், இலவச திட்டங்கள்
அனைத்தும், மாணவர்களுக்கும் சென்றடையும் வகையில், பணியாற்றவேண்டும் என,
கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இலவச பொருட்கள் வழங்குவதில் தாமதம்
ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை
எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment