காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல தேர்வர்களுக்கு, தென்
மாவட்டங்களில், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்திருப்பதால், தேர்வர்கள்
குழப்பம் அடைந்துள்ளனர்.
வரும், 17, 18ம் தேதிகளில்,
டி.இ.டி., தேர்வு நடக்கிறது. ஏழு லட்சம் பேர், இத்தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வர்களுக்கான, ஹால் டிக்கெட்டுகள், www.trb.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.
பெரும்பாலும், தேர்வர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு அருகிலேயே, தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், காஞ்சிபுரம் மற்றும் பக்கத்து
மாவட்டங்களைச் சேர்ந்த பல தேர்வர்களுக்கு, தென் மாவட்டங்களில், தேர்வு
மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு, தேர்வர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஒரு தேர்வருக்கு,
நெல்லை மாவட்டத்தில், தேர்வு மையம், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "விண்ணப்பங்கள்,
ஸ்கேன் செய்யப்பட்ட போது நடந்த சிறிய தவறுகளால், இந்த குழப்பம்
ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்து வருகிறோம். ஓரிரு நாளில், புதிய மையங்கள்
அமைக்கப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும்.
எனவே, சம்பந்தப்பட்ட தேர்வர்கள், புதிய, "ஹால் டிக்கெட்"டுகளை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என தெரிவித்தன.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment