மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற, பிளஸ் 1 பயிலும் சிறுபான்மை மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள
செய்திகுறிப்பு: "கல்வியில் சிறந்து விளங்கி, கல்வியை தொடர வசதி இல்லாத
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவிகளுக்கு மத்திய அரசின் மவுலானா ஆசாத்
தேசிய கல்வி உதவித் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம், சீக்கியர்,
புத்தமதத்தினர், பார்சி மதங்களை சேர்ந்த பிளஸ் 1 வகுப்பு பயிலும்
மாணவிகளுக்கு, மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் 12,000 ரூபாய் கல்வி
உதவித் தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது.
இக்கல்வி உதவித் தொகை, கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுது
பொருட்கள், உண்டி உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 959 சிறுபான்மை மாணவிகளுக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (முஸ்லிம் 458, கிறிஸ்தவர் 499, சீக்கியர் 1,
புத்தமதத்தினர் 1).
இந்த உதவித் தொகை பெற, எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பில்
குறைந்தபட்சம் 55 சதவீத மார்க் பெற்று, நடப்பாண்டில், மத்திய மாநில அரசால்
அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 1 வகுப்பு பயில்பவராக இருக்க
வேண்டும். (சேர்க்கை அனுமதி சீட்டு இணைக்க வேண்டும்).
குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக
இருக்க வேண்டும். வருமான சான்றிதழ், 20 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற சாரா
முத்திரைதாளில் உறுதி ஆவணம் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து
தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித்
தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதர விபரங்களை
இணையதளத்தில் இருந்து படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
கல்வி நிலைய தலைமை ஆசிரியர்/தாளாளர், தங்கள் கல்வி
நிலையத்தில் பிளஸ் 1 பயிலும் சிறுபான்மையினர் மாணவியிடம் இருந்து பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள
பிற சேர்க்கை 1ல் மற்றும் 2ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன்
அசலாக, The secretary, maulana education foundation, (ministry of
minority arffairs, government of india) chelms ford road, new delhi100
055, என்ற முகவரிக்கு செப்டம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சேரும் வகையில்
அனுப்ப வேண்டும்.
2012-13ம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை
விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை http:/maef.nic.in என்ற இணையதள
முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மாணவிகள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி
பெற்ற விபரங்களை உடன் மேலே உள்ள முகவரிக்கு கல்வி நிலையங்கள்
அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த வாய்ப்பை சிறுபான்மையின
மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது."
No comments:
Post a Comment