வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இந்தியா முழுவதும், நேற்று நடந்தது.
தமிழகத்தில், 3,500 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர். கடந்த, 2010ம்
ஆண்டுக்கு பின், சட்டம் படித்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்பவர்கள்,
கண்டிப்பாக தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என, அகில இந்திய
பார் கவுன்சில், 2009ல் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்தியா முழுவதும், அகில இந்திய பார் கவுன்சில்,
வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தி
வருகிறது. அரசு சட்டக் கல்லூரிகளில், பெரும்பாலும் பொருளாதாரம், கல்வியில்
பின் தங்கியவர்களே பயில்கின்றனர். இவர்கள், கடினமாக உழைத்து தேர்ச்சி
பெறுகின்றனர்.
எனவே, மீண்டும் புதிய தேர்வை நடத்த கூடாது. அவ்வாறு நடத்த
வேண்டுமென்றால், பல்கலைக்கழக தேர்வுகளுடன் சேர்ந்து நடத்த வேண்டும் என
கோரி, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த, இரண்டாண்டுகளில்,
ஐந்து முறை நடைபெற்ற தகுதி தேர்வில், மூன்று தகுதி தேர்வுகளை
புறக்கணித்தனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதும், நேற்று நடந்த வழக்கறிஞர் தகுதி தேர்வை,
25 ஆயிரம் பேர் எழுதினர். தமிழகத்தில், அம்பேத்கர் சட்டக்கல்லூரி,
அடையாறு, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், கோவை சட்டக் கல்லூரி உள்ளிட்ட,
ஐந்து மையங்களில் நடந்த தேர்வை, 3,500க்கும் மேற்பட்டோர் எழுதினர்.
No comments:
Post a Comment