(உங்களை ஒப்பிட்டு பொறுமையோடு முழுமையாக படியுங்கள்)
துறவு என்பது வாழ்வை துறப்பதா?
வாழ்வின் அடிப்படையான ஆசைகளை துறப்பதா ?
ஆசைகளின் அடிப்படையான எண்ணத்தை துறப்பதா ?
எண்ணம் துறந்த மனம் எப்படி இருக்கும்/ இயங்கும்?
எண்ணமற்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் தானே அந்த எண்ணமற்ற நிலைக்கும் வித்து எண்ணம்?
துறவு என்பது வாழ்வை துறப்பதா?
வாழ்வின் அடிப்படையான ஆசைகளை துறப்பதா ?
ஆசைகளின் அடிப்படையான எண்ணத்தை துறப்பதா ?
எண்ணம் துறந்த மனம் எப்படி இருக்கும்/ இயங்கும்?
எண்ணமற்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் தானே அந்த எண்ணமற்ற நிலைக்கும் வித்து எண்ணம்?
இந்த சிந்தனைக்கள் அனைத்தும் துன்பமற்று இன்பமயமான மன வாழ்விற்கான சிந்தனைகள் தான். ஆனால், மனிதனான நாம் அவற்றை தவறாக பொருள் உணர்ந்து வாழ்வில் சிக்கலை வளர்த்துக் கொள்கிறான்.
பிறப்பு முதல் இறப்பு வரையே வாழ்வு/ வாழ்க்கை. அதை துறத்தல் என்பது மரணத்தை தேடிக்கொள்வது என்று தான் பொருள் படுகிறது. அது இயற்கையில் உண்டு என்பதும் அதை தவிர்ப்பது எல்லா மனித அறிவுக்கு எட்டாதது. இயற்கையில் இருக்கும் ஒரு நிலையை முன்கூட்டியே பெற முயல்வது, நம் அறியாமையால் வரும் இயலாமையின்றி வேறென்ன?
வாழ்வில் ஏற்படும் துன்பங்களை எதிர்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இயலாதபோது மனித மனம் “நான்” (”நான்” என்பது என்ன என்று பிறகு விரிவாக பார்ப்போம்) என்ற எண்ணப்பிடிப்பில் சிக்கி குறுக்கி சிந்தித்து மனதை துன்பப்படுத்தி அதிலிருந்து விடுவித்துக்கொள்ள மரணத்தை தேடிக்கொள்கிறது. ஒவ்வொரு உயிரும் தான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு தானே பிறக்கிறது. மனதில் துன்பம் பெரிதும் அண்டாத குழந்தைப்பருவத்தை நினைவூட்டிப்பாருங்கள் நீண்ட ஆயுளை தானே உங்கள் மனம் விரும்பி இருக்கும். அது தானே இயற்கை எண்ணம். அப்போ, வாழ்வை துறக்க யாரும் சொல்லவில்லை. பிறகு ஏன் வாழ்வின் மீது வெறுப்பு?
வாழ்வில் ஆசைகளை துறந்து வாழ இயலுமா? பிறப்பு முதல் இறப்பு வரை ஆசையின்றி வாழ இயலுமா? உடல்/ மனத்தேவைகளை ஆசையின்றி எவ்வாறு போக்கிக்கொள்ள முடியும்?. அவ்வாறு எழும் ஆசைகளை போக்கவில்லை எனில் அதுவே துன்பமாக மாறுமே.
ஆசையால் துன்பம் யாருக்கெல்லாம் வருகிறது ? ஆசையை ஆய்வு செய்யாதவர்களுக்கு தானே. ஆய்வு எனில் தன் தகுதி, அளவு, முறை, ஆசையின் ஏற்படும் விளைவுகள் தனக்கோ பிறர்க்கோ உடல்/ மன பாதிப்பு எப்போதும் ஏற்படாத வண்ணம் ஆசையை சீரமைத்துக்கொள்வது என்று கொள்வோமா?. ஏன் சீரமைத்துக்கொள்ள முடிவதில்லை? நம் ஆசைகளை நாம் விரும்புவதில்லை அதனால் தான். எப்படி? உங்கள் ஆசை சரியோ தவறோ முதலில் அதை நீங்கள் அன்போடு விருப்போடு பார்க்க வேண்டும். ஆனால் நாம் மன இறுக்கத்தோடு உணர்ச்சி நிலையில் தானே நம் ஆசைகளை பார்க்கிறோம். அதற்கு என்ன பொருள் ?
நீங்கள் உங்களை அந்த ஆசை அடைவதற்குண்டான தகுதி குறைந்தவராக கருதுவது தனே? அது தானே உங்களிடம் உங்கள் ஆசைக்கு எதிர்மறையான எண்ணங்களையும் அதுவே மெல்லிய பதற்றத்தையும் கொள்ளவைக்கிறது. நீங்கள் இப்போது உங்கள் எதிர் மறையான எண்ணங்களோடு போராட போய்விட்டீர்கள். அது மனப்போராட்டமாக மாறுகிறது. அய்யோ! அப்பா!.. இந்த போராட்டம் முடியல இந்த ஆசையே வேண்டாம் விடு என்று எத்தனை ஆசைகளை துறந்திருப்பீர்கள். யோசித்துப்பாருங்களேன். உண்மையில் அந்த ஆசைகளை அடைய முடியாமை மனதின் ஓரத்தில் ஓர் ஏக்கமாக மாறி துன்புறுத்துவதை உணராதவர் யார் இப்பூவுகில்?
வேறு வழியே இல்லை அந்த ஆசையை அடைந்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் அந்த ஆசை பூதமாக மாறி நமக்கு இடரையும் இன்னலையும் தந்த போதும் அந்த ஆசையை விடாமல் முயன்று முடித்த பின்பும் நம் மனதிற்கு முழுமையும், நிறைவும், இன்பமும் கிட்டாமல் சின்ன ஓய்வு உணர்வும், பாரம் நீங்கிய உணர்வும் மட்டும் தோண்றுவது ஏன்? ஏனெனில் நீங்கள் அந்த ஆசையை சுமக்கிறீர்கள். அதுவே பாரமாய் சுமையாய் மாறுகிறது.
முற்றிலுமாக ஆசையை துறக்காமலும், அல்லது ஆசையை முறையின்றி கையாளுதலும் தவறு. இதை ஆசையின் பால் விழிப்புணர்வு இன்னை எனக் கொள்ளலாம்.
சரி ஆரம்பத்திற்கு போவோம். ஆசையின் பால் . விருப்பும் அன்பும் வேண்டும் என்று பார்த்தோம் ஏன்? நிறைவான மகிழ்ச்சி மனநிலையில் நீங்கள் தவறான முடிவுகளை எடுத்து இருக்கிறீர்களா? சிந்தியுங்கள். உண்மையில் அன்பான ஆசையான மனநிலை உங்கள் மனதிலே ஓர் அமைதியையும் அதில் வலிவையும் ஏற்படுத்தும் அது உங்கள் அக/ புறச்சூழல்களை சீராக காட்டவல்லது. இங்கு உங்கள் ஆசை சீராக தன்னைத்தானே பல நிலைகளில் ஆய்ந்துக்கொள்ளும். சரியெனில் வைத்தும் தவறெனில் நீக்கியும் கொள்ளும் பக்குவமும் வலிமையும் இயல்பாக இருக்கும். அந்த ஆசையே உங்களை இயக்கும் செயலூக்கம் பெறும் விடையாக இன்பமும் நிறைவையும் தரும்.
இதை எப்படி விளங்கிக்கொள்வது? ஒரு சிலர் பெரிது அல்லல் பட்டு செய்யும் செயலை பார்த்து, “ இது சிம்பில் விசயம் ஏன் இவர் இதுக்கு போய் இப்படி அலட்டிக்கிறார்”, என எண்ணியிருப்போம். இங்கே நிற்க. அதாவது அந்த செயலுக்குரிய மனப்பக்குவம், மன ஆற்றல், மன இயலுமை நமக்கு உள்ளதாக நம்மை நம் மனதை நான் உணர்கிறோம்.
அதாவது மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்வோம், ஆசை அடைவதற்குண்டான தகுதி உள்ளவராக நம்மை நாம் கருதுவதால் அது நமக்கு இயல்பானதாய் இனிமையானதாய் உணர்கிறோம். ஆனால் தகுதி மிகுந்தவராக கருதுதல் தான் கர்வம். இதுவும் உணர்ச்சிவய நிலையே. இதில் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதோடு முழுமையான மனநிறைவு ஏற்பட வாய்ப்பு குறைவு. உணர்வு/ உறவு பினக்குகள் வரலாம்.
என்னப்பா இது உணர்ச்சிவயம் ? மனம் இயற்கை நிலையில் இல்லாமல் இயங்குவது. அதாவது அக/புற சூழலை சீராக உணராமல் மிகைப்படுத்தியும் குறைவுப்படுத்தியும் தவறாக உணர்வது. இன்னும் கொஞ்சம் தெளிவாய் அறிவோம் இந்த உடலில் இரத்தமோ, காற்றோ, வெப்பமோ குறைந்தோ கூடியோ ஓட்டமெடுத்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்? அது இரண்டையும் மனம் தன் உணர்ச்சிவய நிலையில் கொள்கிறது.
சரி Topicக்கு வருவோம். உடல் எப்படி தன் புது சூழலுக்கு ஒப்ப தன் இரத்த, வெப்ப மற்றும் காற்றோட்டத்தை தானாக மாற்றிக்கொள்கிறது என்பதை யாருக்கும் விளக்கத்தேவையில்லை. நீங்கள் போய் உங்கள் உடலிடம் இங்கு Degreeயை மாற்றிக்கொள் என்று உணரவோ சொல்லவோ முடியுமா? அது சாத்தியமா? அது சூழலுக்கு ஒப்ப (Situational Opt) துல்லியமாக தன்னைத்தானே மடைமாற்றிக் கொண்டு செயல் புரிகிறது.
இது மனதிற்கு பொருந்தாதா? திறன் மிகுந்தவராக, திறன் குறைந்தவராக உங்கள் மீது நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் கருதுகோள்கள் தான் “நான்” என்ற சூழலுக்கு ஒவ்வாத குறுகிய எண்ணப்போக்கு (Fixed Approach). இதனால் தான் மனதில் இடர், இன்னல் ஏற்பட்டு துன்பப்படுகிறது.
30, 40, 50 வருடங்களில் கொண்ட அனுபவத்தை மட்டும் வைத்து இந்த மனதைச்சார்ந்து பல்வேறு கருதுகோள்களை உருவாக்கி அதன் மூலம் மனம் தன் இயல்பான செயல்போக்கிற்கு தடை செய்து துன்பத்தை பரிசாக பெறுகிறோம்.
உண்மையில் இம்மனதின் வயசென்ன ? 40, 50, 60 வருடமா? அண்ட வேளியில் சுத்த வெளியாக இருந்து, முதல் விண், அதுவே பஞ்ச பூதமாக பரினமித்து, ஓர் உயிரி முதல் ஆரறி வரை பரினமித்து வந்துள்ள உயிர் தொடராய் வந்துள்ள மனித மனதின் வயது பல்கோடி ஆண்டுகள் என்பதை மறுப்பீர்களா? உயிரின் வெளிப்பாடு தானே மனம்
உண்மையில் இம்மனம் எல்லாம் வல்லது உடல் பொருளில் இருந்து பல்நிலைகளில் தம்மைத்தாமே காத்து பாதுகாத்து சூழலுக்கு ஒத்து தகவமைத்து வாழ்ந்து வந்துள்ளது.
சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதன் முழுமையான உண்மையான சிந்தனைப்போக்கை கொள்ளாததால் தான் இத்துன்பங்கள். நான் என்ற இந்த இயற்கையான மன இயக்க நியதிக்கு முரணான போக்கை கைவிட்டால், மனம் தன் பாரங்கள் நீங்கி இனிமையாக இயல்பாக சூழலுக்கு ஒத்து இயங்கி தன் ஆசையில் தெளிவுப்பெற்று அதை அடைந்து முழுமையும் இன்பமும் பெறும்.
எப்படி ”நான்” துறப்பது/ போக்குவது ? எவ்வாறு இயற்கை நிலையோடு மனதை இணைப்பது? உயிர் உணர்வான பேரறிவு எவ்வறு உள்ளுணர்வாய் எழுந்து நமக்கு சீரான ஒத்த எண்ணப்போக்கை தந்து இயக்கும்? பார்த்தீர்களாக மீண்டும் நாம் கருத்துகளை புறத்தே தேடுகிறோம். இதற்கான எல்லா விடையும் அகத்தே உண்டு. சற்று இடைவெளிக்கு பின் இதை உங்களோடு ஆய வருகிறேன்.
இதை தயவு செய்து உளவியல் என்று குறுக்கி பார்க்க வேண்டாம். உளவியல் இப்போ தான் வளர்ந்து வரும் குழந்தை. இப்போ தான் மனதின் சில போக்குகளை உளவியல் பல தடுமாற்றத்தோடு அறிவித்து இருக்கிறது. உங்கள் உள்ளத்தை உங்கள் உள்ளத்தைவிட நன்கு அறிந்தவர் யார்? யாரால் பிற யாரால் அதை அறிய முடியும்?
நம் அகத்திலும் புறத்திலும் அன்பு ஓங்கி அது உங்களுக்கு ஆழ்நத பொறுமையையும், அசராதா பேரமைதியையும், சீர் நிதானத்தையும் தந்து இன்பத்தையும் நிறைவையும் மகிழ்ச்சியையும் தருமாக.
உங்கள் கருத்துக்கள் இக்கருத்துக்களின் சீர்மைக்கு உதவும்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
ச.பிரகாசம்
No comments:
Post a Comment