"அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், மாணவர்கள் பாதுகாப்பு கருதி,
கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில்
உள்ள தனியார் பள்ளி மாணவன் சூர்யாவை, சில தினங்களுக்கு முன், ஒரு கும்பல்
கடத்திச் சென்றது. போலீசார், தீவிர நடவடிக்கைக்குப் பின், சிறுவன்
மீட்கப்பட்டான். இந்த சம்பவம், பெற்றோர் மத்தியில், கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, அனைத்து மெட்ரிகுலேஷன்
பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என, மெட்ரிக் பள்ளி
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க
பொதுச்செயலர், நந்தகுமார் கூறுகையில், "பெரும்பாலான தனியார் பள்ளிகளில்,
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னணி தனியார் பள்ளிகளில்,
அனைத்து இடங்களிலும், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கேமராக்கள் பொருத்தாத பள்ளிகளில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்தார்.
No comments:
Post a Comment