"வயது வரம்பு குறித்த விதிமுறைகள், பல்கலை விதிமுறைகளில்
இடம் பெறாத நிலையில், அதைக் காரணமாகக் கூறி, யாருக்கும் சேர்க்கை
மறுக்கப்படக் கூடாது" என, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டு உள்ளது.
டில்லியைச் சேர்ந்தவர், சுனிதா ராணி, 46. இவர், டில்லி,
ஜமிலா மிலா இஸ்லாமியா பல்கலையில், பி.எட்., படிப்பில் சேருவதற்காக
விண்ணப்பித்திருந்தார். வயது அதிகமாக உள்ளதாகக் கூறி, இவருக்கு, சேர்க்கை
மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து, சுனிதா ராணி, டில்லி ஐகோர்ட்டில், மனுத்
தாக்கல் செய்தார்.
அதில், "வயது அதிகமாகி விட்டதாகவும், முதுநிலைப் பட்டப்
படிப்பை முடித்து, மூன்று ஆண்டுகளுக்கு மேலான நிலையில், பி.எட்., படிப்பில்
சேருவதற்கு விண்ணப்பித்திருப்பதை ஏற்க முடியாது என்றும், பல்கலை
நிர்வாகம் கூறி விட்டது" என, தெரிவித்திருந்தார்.
நிர்வாகம் கூறி விட்டது" என, தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பு
விவரம்: பல்கலையின் விதிமுறைகளில், பி.எட்., படிப்பில் சேருவதற்கான
அதிகபட்ச வயது வரம்பு தொடர்பாக, எதுவும் கூறப்படவில்லை. எனவே, வயதைக்
காரணமாகக் கூறி, யாருக்கும் சேர்க்கை மறுக்கப்படக் கூடாது.
பல்கலை உயர் கல்வியில், அதிகபட்சமாக, எத்தனை பேருக்குக்
கல்வி அளிக்க முடியுமோ, அத்தனை பேருக்கும், கல்வி பயிலுவதற்கான வாய்ப்பு
அளிக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட வயதைக் காரணம் காட்டி, சேர்க்கை
மறுக்கப்படக் கூடாது. இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டது.
No comments:
Post a Comment