"தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள, 3,000 காலிப்பணியிடங்களை,
நிரப்ப வேண்டும்" என இத்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன்
தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில், அவர்
கூறியதாவது: ஊரக வளர்ச்சித் துறையில் சாலை ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்
என, 1,500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. நூறு நாள் வேலை திட்டம்,
தாய் திட்டம், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., நிதி மேம்பாட்டு திட்டம்,
ஊராட்சி ஒன்றிய பொது நிதி வேலைகள் போன்ற திட்டத்திற்காக, அரசு
அனுமதித்துள்ளதில், 1,500 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த 3,000
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், 265 ஊராட்சிகளில் செயல்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் வரை நடைபெறும் இத்திட்டத்தில், ஒப்பந்த
அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதில் வளர்ச்சித் துறை
அலுவலர்களுக்கு பதவி உயர்வு மூலம் பணி வழங்க வேண்டும், என்றார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment