திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து பெறப்படும் டிப்ளமோ, இளங்கலை,
முதுகலை பட்டங்கள், முறையான படிப்புகளுக்கு சமமாக கருதி தமிழக அரசின்
வேலைவாய்ப்பு வழங்க பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
அனுமதித்தது.
இந்நிலையில் அடிப்படை
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம்
முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் பொதுப்பணிகளில் நியமனம் செய்ய
இயலாது என பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை கடந்த 2010ல் புதிதாக அரசாணை
வெளியிட்டது. அதனடிப்படையில் பள்ளிக் கல்வி செயலர் சபிதா வெளியிட்டுள்ள
அரசாணை:இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி
பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றால் பொதுப்பணிக்கு
கல்வித்தகுதியாக கருத இயலாது.
எனவே பள்ளிக் கல்வித்துறையில் இளங்கலை
முடிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் முதுகலைப் பட்டம் முடித்த
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய சலுகைக்கான பழைய அரசாணை ரத்து
செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment