சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு
நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும், நடுநிலைப்
பள்ளி ஆசிரியர்களுக்கு, வழிகாட்டு பயிற்சி அளித்து வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பால், பருவ கால முறையில் அதிகளவில் மாற்றம்
ஏற்படுகிறது.
இதுகுறித்து, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் நடத்த, முடிவு
செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, தமிழக நடுநிலைப் பள்ளி
ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில், எட்டு நாட்கள்
பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் தினமும், 60 ஆசிரியர்களுக்கு
பயிற்சி அளிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்களுடன், பள்ளிக் கல்வித்துறையும்
இணைந்து, பிரசார வழிகாட்டு பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்குகிறது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், வகுப்பறைகளில், மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்பட உள்ளனர்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment