தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர்
சந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் உக்கிரபாண்டி வரவேற்றார்.
பிரசார
செயலாளர் சுரேஷ், துணை தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். தரம்
உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளுக்கான கலந்தாய்வு முறைகேடுகள்
கண்டிக்கத்தக்கது; சம்பள உயர்வு தொடர்பான 3 நபர் குழு அறிக்கை, முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது; ஆசிரியர்களின் பத்து
மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்களின் "உண்மைத் தன்மை' வழங்கும் அதிகாரத்தை,
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்; பணிநீக்கம் செய்யப்பட்ட 652
கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்; ஆசிரியர் மற்றும்
ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பழனிவேல்ராஜன் நன்றி கூறினார்
No comments:
Post a Comment