நாடு முழுவதும், 32 அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்.,
படிப்பில் சேர, கூடுதலாக, 1,390 இடங்களை உருவாக்குவதற்கு, மத்திய அரசு
அனுமதி வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் கூட்டம், நேற்று
நடந்தது. இதில், மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ், இடங்களை
கூடுதலாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், 32 அரசு மருத்துவ
கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., சீட்களின் எண்ணிக்கையை, 1,390 கூடுதலாக்க
முடிவு செய்யப்பட்டது. இது, நடப்பு கல்வியாண்டில் இருந்து, அமலுக்கு
வருகிறது. தற்போது நாட்டில், 362 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில்,
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, 45 ஆயிரம் சீட்கள் உள்ளன. தற்போது
கூடுதலாக்கப்படும் சீட்டுகளின் மூலம், 46,500 சீட்களாக உயரும்.
தற்போது, அரசு மருத்துவ கல்லூரிகளில், 50 எம்.பி.பி.எஸ்., சீட்கள் உள்ள
கல்லூரிகளில், 100 சீட்களாகவும், 100 சீட்களாக உள்ள கல்லூரிகளில், 150
ஆகவும் உயர்த்தப்படுகிறது.
No comments:
Post a Comment