இன்று ஒவ்வொரு ஆண்டு முடியும் போது பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள்
தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை வாய்ப்பு சந்தைக்கு வருகிறார்கள்.
ஆண்டு தோறும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது, புதிய வேலை
வாய்ப்புகளும் உருவாகிறது.
pack
:
மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி: குழந்தைத் திருமணத்தை தடுக்க திட்டம்
பள்ளியில் இருந்து இடையில் நிற்பது மற்றும் குழந்தை
திருமணத்தை தடுக்க மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி அளிக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2, 10ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகள், மாநில அளவில்,
பொதுத்தேர்வாக, செப்., 10ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கின்றன. பிளஸ்
2 தேர்வுகள், 10 நாட்களும், 10ம் வகுப்பு தேர்வுகள், ஏழு நாட்களும்
நடக்கின்றன. இத்தேர்வை, 19 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
516 காலி பணியிடங்கள்: செப்., 4, 5ல் நான்காம் கட்ட கலந்தாய்வு
குரூப்-4, பணியிடங்களுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வு, செப்., 4, 5 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது.
"1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்"
"தமிழகத்தில் 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே
உள்ளார். அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது.
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்" என ராமநாதபுரத்தில்,
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர், ச.மயில்
தெரிவித்தார்.
டி.இ.டி., தற்காலிக விடை வெளியீடு: செப்., 2 வரை கருத்து தெரிவிக்கலாம்
டி.இ.டி., தேர்வு தற்காலிக விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.
"தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை, செப்., 2ம் தேதிக்குள், கடிதம்
வழியாக தெரிவிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.
குரூப்-4 தேர்வில் கணிதம் கடினம்: தேர்வு எழுதியவர்கள் புலம்பல்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் கணிதம் பகுதி கடினமாக இருந்ததாக,
தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். எனினும் பொது அறிவு பகுதியில்
இடம்பெற்ற பல கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஆசிரியர்களுக்கு வழிகாட்டு பயிற்சி
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு
நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும், நடுநிலைப்
பள்ளி ஆசிரியர்களுக்கு, வழிகாட்டு பயிற்சி அளித்து வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பால், பருவ கால முறையில் அதிகளவில் மாற்றம்
ஏற்படுகிறது.
வழக்கறிஞர் தகுதித் தேர்வு: தமிழகத்தில் 3,500 பேர் பங்கேற்பு
வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இந்தியா முழுவதும், நேற்று நடந்தது.
தமிழகத்தில், 3,500 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர். கடந்த, 2010ம்
ஆண்டுக்கு பின், சட்டம் படித்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்பவர்கள்,
கண்டிப்பாக தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என, அகில இந்திய
பார் கவுன்சில், 2009ல் உத்தரவிட்டது.
எம்.எட்., தேர்வு முடிவுகள் 26ம் தேதி வெளியீடு
எம்.எட்., தேர்வு முடிவு, நாளை (26ம் தேதி), ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
2030ம் ஆண்டுக்குள் 50% பேருக்கு மனநலம் பாதிக்கும்: உலக சுகாதார அமைப்பு
"வரும் 2030 ம் ஆண்டுக்குள், உலகில் 50 சதவீதம் பேருக்கு மனநலம்
பாதிக்கும் வாய்ப்பு உள்ளது" என உலக சுகாதார மைய ஆய்வில், அதிர்ச்சி தகவல்
வெளியாகி உள்ளது. இதனால், பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடம், மனநலம்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
"தனியார் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளுக்கு செல்ல வேண்டியதில்லை"
கோவை மாநகராட்சி பள்ளி ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கு, "இங்கிலீஷ் ஹெல்பர்" டிஜிட்டல் பாடத்திட்டம் குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.
பெற்றோர்களே வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுங்கள்
இன்றைய நவீன உலகில், கல்வி கட்டாயமாகிவிட்டது. அதுவும், முன்பெல்லாம்
ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டுமெனில், ஓரளவு எழுத்தறிவு பெற்றிருந்தால்
போதும். இந்நிலை இன்று மாறிவிட்டது. மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி
மற்றும் மக்கள் தொகை உயர்வு காரணமாக, வேலைவாய்ப்பு என்பது சுமையாக மாறி
உள்ளது.
காற்றில் பறக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம்: 3055க்கு 762 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை
தமிழகத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய
கல்வி உரிமைச்சட்டம் (ஆர்.டி.இ.,) சுத்தமாக மதிக்கப்படவில்லை என்பது, தகவல்
உரிமைச் சட்டத்தால் அம்பலமாகியுள்ளது.
குரூப்-4: முறைகேடு செய்தால் தேர்வெழுத தொடர்ந்து தடை
தமிழகம் முழுவதும் 14 லட்சம் பேர் பங்கேற்கும், குரூப்-4 தேர்வு நாளை
நடக்கிறது. இதையொட்டி, டி.என்.பி.எஸ்.சி., பல்வேறு, கிடுக்கிப்பிடி
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
40 ஆயிரம் பள்ளிகளில் சதுரங்கப் போட்டி
மாநிலம் முழுவதும், 40 ஆயிரம் பள்ளிகளில், நேற்று, சதுரங்கப் போட்டி
துவங்கியது. செப்டம்பர் இறுதியில், மாநில அளவில், இறுதிப் போட்டிகள்
நடக்கின்றன.
திசை மாறும் மாணவர் சமுதாயம்
வள்ளியூரில் நடந்து சென்ற பெண்ணிடம் பள்ளி மாணவர்கள் செயினை
பறிக்க முயன்ற சம்பவத்தில் பள்ளியில் போலீசார் விசாரணை மேற்கொண்டதின்
எதிரொலியாக அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சம்பவம் பெறும்
பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து இரண்டு மாணவர்களிடம் போலீசார்
தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புல்லையும் பணமாக்கும் விவசாயப் பொருளியல்
“விவசாயப் பொருளியல்” (அக்ரிகல்ச்சர் எகனாமிக்ஸ்) எனப்படுவது
விவசாயிகளுக்கு தங்கள் நிலத்தை சேவை நோக்கோடு மட்டுமல்லாமல் வணிக
கண்ணோட்டத்துடனும், பொருளை ஈட்டும் வகையில் நில நிர்வாகம், வேலையாட்கள்,
முதலீடு மற்றும் சிறு பண பரிமாற்றங்களின் அடிப்படை போன்றவற்றால் அவர்கள்
வாழ்க்கைத் தரத்தை மேம்பட வைப்பதற்கு உதவுவதற்கான படிப்பே விவசாயப்
பொருளியலாகும்.
நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள்
இன்றைய இளம் தலைமுறையினரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் குறைந்து வருவதாக
பெரியவர்கள் பலரும் கவலை கொள்கின்றனர். தினந்தோறும் நடக்கும் பல்வேறு
சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.
வெளிநாட்டு கல்விக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
உலகமயமாதல் யுகத்தில் வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் சென்று படிப்பது
சாதாரணமாகிவிட்ட நிலையில், எந்த நாட்டில் படிக்க, எப்போது விண்ணப்ப மற்றும்
விசா செயல்பாட்டை தொடங்க வேண்டும் என்பதை அறிதல் முக்கியம்.
பள்ளி பாடப்புத்தகம் அச்சிடுவதில் தமிழக அச்சகங்களுக்கு முன்னுரிமை
"பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை அளிப்பதில், தமிழக
அச்சகங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்" என தமிழ்நாடு பாடநூல் கழக
நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கம்
பிற மொழிச் சொற்களுக்கு இணையான, 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன.
தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில், புதிய சொற்கள்
உருவாக்கப்பட்டன.
பள்ளிகளில் இலவச திட்டங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு கண்டிப்பு
அரசு வழங்கும் இலவச திட்டங்களை, பள்ளி மாணவர்களுக்கு, முறையாக வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.
கணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? பிளஸ் 2 மாணவர்கள் எதிர்பார்ப்பு
மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள்,
652 பேரை, அரசு பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிளஸ் 2 கணினி பிரிவு
மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள்
நியமனம் எப்போது என, மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர்.
எஸ்.எம்.எஸ்., மூலம் அரசு பொதுத்தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை,
மாணவர்கள் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு
செய்து வருகிறது. இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு
எழுதும் மாணவர்களின் விபரங்கள் செப்., 1 முதல் 30ம் தேதிக்குள் ஆன்-லைனில்
பதிவு செய்ய வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
டி.இ.டி., வினாத்தாள் மோசடி: மேலும் 5 பேர் கைது
டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக, மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: அரசு திட்டம்
தமிழக பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,
மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி
அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
குரூப்-4 தேர்வு: 2வது கட்டமாக ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப்-4 தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெறாதவர்களுக்கு அவர்கள் தெரிவித்த
தகவல்களின் அடிப்படையில், நேற்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. வரும்,
25ம் தேதி, குரூப்-4 தேர்வு நடக்கிறது.
வேலை தேடும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்!
இன்றைய காலகட்டத்தில், வேலைதேடி அலையும் பல இளைஞர்கள் புலம்புவது
என்னவெனில், நாம் ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னதாக
பிறந்திருந்தால், மிக எளிதாக வேலை கிடைத்திருக்கும் என்பதுதான்.
டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் டி.ஆர்.பி. அதிகாரிகளுக்கு தொடர்பு? - தினமலர் செய்தி
டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக, ஆறு பேரை கைது செய்த
போலீசார், மேலும், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில்,
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும், தொடர்பு இருப்பதாக
கூறப்படுகிறது.
குறைகளைக் களையுங்கள்; வெற்றி காத்திருக்கிறது
போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், ஒருவரிடமுள்ள சிறிய குறை கூட, அவரது
பணி வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். பலவீனத்தை எப்படி பலமாக மாற்றுவது என
தெரிந்து கொண்டால் போதும். படிப்பிலும், பணியிலும் மட்டுமல்லாது வாழ்விலும்
சாதிக்கலாம்.
அரசுப் பள்ளிகளுக்கு 36,600 மரக்கன்றுகள்: சுற்றுச் சூழல் மன்றம் ஏற்பாடு
சுற்றுச் சூழல் மன்றம் சார்பாக அரசு பள்ளிகளில், 36 ஆயிரத்து 600 மரக் கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, பேச்சு போட்டி
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சு, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
5.65 லட்சம் மடிக்கணினி கொள்முதல்: டெண்டர் பணி தீவிரம்
இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக, நடப்பாண்டு, 5.65 லட்சம்
மடிக்கணினி வாங்க, எல்காட் நிறுவனம் சார்பில், டெண்டர் விடப்பட்டு உள்ளது.
குளறுபடியின்றி முடிந்தது டி.இ.டி., தேர்வு: கர்ப்பிணி பெண்களும் தேர்வெழுதினர்
தமிழகம் முழுவதும் நடந்த, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு எளிதாக
இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். உத்தேச விடை பட்டியல்,
டி.ஆர்.பி., இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு
வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய கல்விக் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, பி.எட்.,
பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள், உடனடி சேர்க்கைக்காக வரவேற்கப்படுகின்றன.
புதிய படிப்புகள்: பல்கலைக்கழகங்கள் அரசின் அங்கீகாரத்தையும் வழங்கவேண்டும்
வேலை வாய்ப்பு பெறத்தக்க பாடங்கள் எனக்கூறி, கல்லூரிகளில், புதிய
பெயர்களில் பல பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. அரசின் அங்கீகாரம் பெறாமல்
வழங்கப்படும், இதுபோன்ற படிப்புகளால், வேலை வாய்ப்பு பெறுவதில்,
இளைஞர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல்கலை விதிமுறைகளில் வயது வரம்பு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
"வயது வரம்பு குறித்த விதிமுறைகள், பல்கலை விதிமுறைகளில்
இடம் பெறாத நிலையில், அதைக் காரணமாகக் கூறி, யாருக்கும் சேர்க்கை
மறுக்கப்படக் கூடாது" என, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டு உள்ளது.
டி.இ.டி. வினாத்தாள் இருப்பதாகக் கூறி மோசடி: குற்றவாளிகள் கைது
தமிழகம் முழுவதும் நேற்று, டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் தேர்வு நடந்தது.
தர்மபுரி மற்றும்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிலர், இத்தேர்வுக்கான வினாத்தாள்களை
தருவதாகவும், ஒரு வினாத்தாளுக்கு, 2 லட்ச ரூபாய் வரை, விலை பேசி
காரிமங்கலம் பகுதியில் தங்கி விற்பனை செய்து வருதாகவும், தர்மபுரி எஸ்.பி.,
ஆஸ்ராகார்க்கிற்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. மோசடியில்
ஈடுபட்ட, டாஸ்மாக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட, ஆறு பேரை போலீசார் கைது
செய்தனர்.
ஆசிரியர் மீதான பாலியல் புகார்: அதிகாரி குழு விசாரிக்க கோரிக்கை
"ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை, இணை இயக்குனர் தலைமையிலான குழு
விசாரணை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு ஆசிரியர்
முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையில் 3,000 காலிப் பணியிடங்கள்
"தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள, 3,000 காலிப்பணியிடங்களை,
நிரப்ப வேண்டும்" என இத்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன்
தெரிவித்தார்.
என்.ஓ.சி., பெற தேவையில்லையா? சி.பி.எஸ்.இ., அறிவிப்பால், கல்வித்துறை அதிர்ச்சி
"சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில அரசுகளிடம், என்.ஓ.சி., வாங்கத்
தேவையில்லை" என, சி.பி.எஸ்.இ., அறிவித்தித்திருப்பது, தமிழக கல்வித்
துறையை, அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. "இந்த பிரச்னையை, முதல்வரின்
கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்" என கல்வித்துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
டி.இ.டி., தேர்வுகளில் ஈடுபடபட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
"ஆசிரியர்
தேர்வு வாரியம் நடத்தும் டி.இ.டி., தேர்வு பணிகளை முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்,'
என, பட்டதாரி ஆசிரியர்கள் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
குரூப்-4 தேர்வு: 5,500 இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி
வரும், 25ம் தேதி நடக்க உள்ள, குரூப்- 4 தேர்வுக்கு விண்ணப்பித்த, 17
லட்சம் பேரில், தகுதியில்லாத, 3 லட்சம் பேரின் விண்ணப்பங்களை,
டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்துள்ளது. இறுதியாக, 5,566 இடங்களுக்கு, 14
லட்சம் பேர் போட்டி போடுகின்றனர்.
உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியில் சேர முடியாமல் பரிதவிப்பு
பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர முடியாமல் பரிதவிக்கின்றனர்.
பி.எட்., படிப்பு: 9,000 விண்ணப்பங்கள் விற்பனை
பி.எட்., படிப்பிற்கு, நேற்றுடன், 9,000 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும்
கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும்,
தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.
கண்காணிப்பு கேமரா பொருத்த மெட்ரிக் இயக்குனரகம் உத்தரவு
"அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், மாணவர்கள் பாதுகாப்பு கருதி,
கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் கடத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
"பள்ளிக் குழந்தைகளை வரவேற்கவும், அனுப்பவும் பொறுப்பு ஆசிரியர்களை
நியமிக்க வேண்டும்; அழைக்க வருபவர்களுக்கு, முறையான, "அடையாள அட்டை' வழங்க
வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகளை, பள்ளி நிர்வாகங்களுக்கு, சென்னை
போலீஸ் வழங்கியுள்ளது.
பள்ளிகளில் எதிர்பாராத நிகழ்வுகள்: உடனடியாக தெரிவிக்க அரசு உத்தரவு
"பள்ளிகளில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் குறித்து, உடனடியாக
பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு, தலைமை
ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்" என, தமிழக பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா...வா: சர்வதேச இளைஞர்கள் தினம்
ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. ஏனெனில்
இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின்
அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது.
கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு: சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்
"கல்வித் தகுதியுள்ள சத்துணவு உதவியாளர், சமையலர் அனைவருக்கும்
அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என,
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி: தீர்மானம்
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர்
சந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் உக்கிரபாண்டி வரவேற்றார்.
திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் ரத்து
திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து பெறப்படும் டிப்ளமோ, இளங்கலை,
முதுகலை பட்டங்கள், முறையான படிப்புகளுக்கு சமமாக கருதி தமிழக அரசின்
வேலைவாய்ப்பு வழங்க பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை
அனுமதித்தது.
பி.எட். கலந்தாய்வு: இரண்டு நாள்களில் 4,000 விண்ணப்பங்கள் விநியோகம்
பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு கடந்த இரு தினங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கல்வி உதவித்தொகை: சிறுபான்மை சமூக மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற, பிளஸ் 1 பயிலும் சிறுபான்மை மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் மோசடி உறுதியானால் ஊதியம் திரும்பப் பெறப்படும்
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், இடைநிலை
ஆசிரியர்கள் பலர் சான்றிதழ்களை போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளது
விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வை கண்காணிக்க 100 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை
ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக சென்னையில் 100
ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட
ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
கட்டணச் சலுகை உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு
விண்ணப்பித்திருக்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒரு
அறிவிப்பு.
எண்ணெய் மற்றும் எரிவாயு மேலாண்மைக்கான எம்.பி.ஏ., படிப்பு
இந்தியா மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றிலும், ஆற்றல் மற்றும் எரிவாயு
துறையானது, பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. உலகளாவிய போட்டியானது,
அனைத்து ஆற்றல் மற்றும் எரிவாயு அமைப்புகளையும், தங்களின் மேலாண்மை திறனை
மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது.
பி.எட்., விண்ணப்ப விற்பனை துவங்கியது
பி.எட்., படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, நேற்று துவங்கியது. ரம்ஜான்
பண்டிகை என்பதால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில்
கூட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
முதல்வர் தகுதி பரிசு: "கட்-ஆப்" மதிப்பெண் வெளியீடு
அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு,
பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் வழங்கப்படும், முதல்வர் தகுதி
பரிசுக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வு மையம்: தேர்வர்கள் குழப்பம்
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல தேர்வர்களுக்கு, தென்
மாவட்டங்களில், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்திருப்பதால், தேர்வர்கள்
குழப்பம் அடைந்துள்ளனர்.
தகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விடுப்பு: தனியார் பள்ளிகளில் கல்விப்பணி பாதிப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் தனியார் பள்ளி ஆசிரியர்களில்
பெரும்பாலானோர் விடுப்பு எடுத்து, தேர்வுக்கு தயாராவதால், தனியார்
பள்ளிகளில் கல்விப்பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வு ஹால் டிக்கெட் டவுண்லோடு செய்வதில் சிக்கல்
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,) ஹால் டிக்கெட்
இணையதளத்தில், "டவுண்லோடு" செய்ய முடியாததால் தேர்வர்கள் சிரமம்
அடைந்துள்ளனர்.
டி.இ.டி., தகுதி மதிப்பெண் குறைக்க கோரி பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்
"ஆசிரியர் தகுதி தேர்வில், பார்வையற்ற ஆசிரியர்கள் தகுதி பெற, 40 சதவீத
மதிப்பெண்களை, குறைந்தபட்ச மதிப்பெண்களாக நிர்ணயிக்க வேண்டும்" என
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரடி வகுப்புகளில் சேர்ந்து படிக்க தடை
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக, பட்டம், முதுகலை
பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா
பணியாளர்கள், தொலைதூரக் கல்வி இயக்கங்கள் மூலம் உயர்கல்வி பயிலவும், பகுதி
நேரமாக சேர்ந்து படிக்கவும், அரசு அனுமதித்துள்ளது.
பி.எட்., மதிப்பெண் பட்டியலில் குளறுபடி: குவியும் மாணவர்கள்
பி.எட்., மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில், மதிப்பெண்
விவரங்கள் தவறாக அச்சாகி உள்ளன. இதையடுத்து, பல மாவட்டங்களில் இருந்து
வந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல்
மேம்பாட்டு நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி இளங்கலை தேர்வு முடிவு
சென்னை பல்கலை, தொலைதூரக் கல்வி திட்டத்தின், இளங்கலை பட்டப்படிப்பு
தேர்வு முடிவுகள், இன்று, வெளியிடப்படுகிறது. பல்கலையின், அனைத்து வகையான
இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள், பல்கலையில், இன்று
வெளியிடப்படும்.
டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு
"வரும் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க,
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன" என டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார்
தெரிவித்தார்.
டி.இ.டி., தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
டி.இ.டி., தேர்வுக்கான ஹால் டிக்கெட், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று
மாலை வெளியிடப்பட்டது. வரும், 17, 18 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வு
நடக்கிறது. ஏழு லட்சம் பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர்.
1,690 பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம் நிர்ணயம்
"விரைவில், 1,690 தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணம்
நிர்ணயிக்கப்படும்" என, தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவர்
சிங்காரவேலு கூறினார்.
நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு
"மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு, நுழைவுத்
தேர்வு நடத்தக் கூடாது" என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை
எதிர்த்தும், அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும், தனியார்
அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, மேல் முறையீட்டு மனு தாக்கல்
செய்துள்ளது.
ஊதியமின்றி கல்வி கற்பிக்கும் மாணவிகள்
விழுப்புரம் அருகே, அரசு பள்ளியில் ஆசிரியர்
பற்றாக்குறையால், உள்ளூர் பட்டதாரி மாணவிகள் ஊதியம் இன்றி, மாணவர்களுக்கு
பாடம் கற்பித்து வருகின்றனர்.
தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை
தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் பல்வேறு தில்லுமுல்லுகளை
தடுக்கும் வகையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அடையாள
அட்டை வழங்கி, அவர்களின் முழுமையான விவரங்களை, இணையதளத்தில் வெளியிட, அண்ணா
பல்கலை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, ஓரிரு நாளில் நடக்க உள்ள,
"சிண்டிகேட்" கூட்டத்தில், ஒப்புதல் பெறவும், பல்கலை முடிவு செய்துள்ளது.
ஆன்லைனில் வேலைவாய்ப்பக பதிவு: நேரில் வரத்தேவையில்லை
தொழிற்கல்வி மற்றும் முதுநிலை பட்டதாரிகள், கல்வித் தகுதியை தொழில்
மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மதுரை) "ஆன்லைனில்" பதிவு
செய்யலாம். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்த அலுவலகத்தின் கிளை, மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மாடியில் உள்ளது.
வேலை கிடைக்கவில்லையா? தளர்ந்து போகாதீர்கள்
இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் ஒவ்வொரு நிறுவனமாக வேலை தேடி செல்வதை
பார்க்க முடியும். சிலருக்கு முதல் நேர்முகத் தேர்விலேயே வெற்றி கிடைத்து
விடும். சிலருக்கு ஐந்து நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட பின்பும், வேலை
கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இத்தகைய மாணவர்கள் எந்த நேரத்திலும்
தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியே குறிக்கோள்: உளவியல் நிபுணர் அறிவுரை
"மாணவர்கள் படிக்கும்காலத்தில் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கொள்ள வேண்டும்," என சென்னை உளவியல் நிபுணர் ரகுநாத் பேசினார்.
பள்ளி மாணவர்களுக்கு "யோகா" கல்வி கட்டாயம்: ம.பி. அரசு
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, யோகா கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தூக்கம் ஒரு பிரச்சனையா? உங்களோடு ஒரு ஆய்வு -4
நான் நன்றாக தூங்கினேன் என்று மனம் துள்ள பேசும் ஒரு நபர், ”ஏப்மா டல்லா இருக்கே?” என்று கேட்டவுடன், தூக்கம் குறைவுப்பா அதான் என்பார் ரொம்ப சோர்ந்து, தூக்கம் குறைந்த நாளில். ஏன் இந்த துள்ளல் மற்றும் சோர்வு? தூக்கம் சார்ந்த நம் மனப்பான்மை இயற்கையை ஒட்டி இயங்காமை தான் என்பதை முதலில் உணர வேண்டும். சரி என்ன செய்யலாம்?
பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு: 94% பேர் தேர்ச்சி
பி.எட்., படிப்பிற்கான தேர்வு முடிவுகளை,
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 94 சதவீதம்
பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
"ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் குறை இருந்தால் தெரிவிக்கலாம்": கலெக்டர் அறிவிப்பு
அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 203 மாணவ,
மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்
அஹமது தலைமை வகித்து பேசியதாவது:
துறவு / துறப்பு என்பது எதை? துறந்தால் இன்பம் கிட்டுமா? ”நான்” என்றால் என்ன? உங்களோடு ஓர் ஆய்வு- 2
(உங்களை ஒப்பிட்டு பொறுமையோடு முழுமையாக படியுங்கள்)
துறவு என்பது வாழ்வை துறப்பதா?
வாழ்வின் அடிப்படையான ஆசைகளை துறப்பதா ?
ஆசைகளின் அடிப்படையான எண்ணத்தை துறப்பதா ?
எண்ணம் துறந்த மனம் எப்படி இருக்கும்/ இயங்கும்?
எண்ணமற்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் தானே அந்த எண்ணமற்ற நிலைக்கும் வித்து எண்ணம்?
துறவு என்பது வாழ்வை துறப்பதா?
வாழ்வின் அடிப்படையான ஆசைகளை துறப்பதா ?
ஆசைகளின் அடிப்படையான எண்ணத்தை துறப்பதா ?
எண்ணம் துறந்த மனம் எப்படி இருக்கும்/ இயங்கும்?
எண்ணமற்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் தானே அந்த எண்ணமற்ற நிலைக்கும் வித்து எண்ணம்?
கேட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை...
ஐ.ஐ.எம்.,கள் மற்றும் நாட்டின் இதர புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில்,
மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் கேட் தேர்வு நெருங்கும் நேரமிது. பல்வேறான
வழிகளில், கடுமையாக முயன்று தங்களை தேர்வுக்காக மாணவர்கள் தயார்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 1,390 சீட்கள் கூடுதலாகிறது
நாடு முழுவதும், 32 அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்.,
படிப்பில் சேர, கூடுதலாக, 1,390 இடங்களை உருவாக்குவதற்கு, மத்திய அரசு
அனுமதி வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் கூட்டம், நேற்று
நடந்தது. இதில், மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ், இடங்களை
கூடுதலாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)