இந்திய மருத்துவ கவுன்சில் குழுவின் ஆய்வு முடிந்துள்ள நிலையில், சென்னை
மருத்துவக் கல்லூரி, எம்.பி.பி.எஸ்., இடங்கள், அதிகரிக்கப்படுமா என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில், 165 ஆக உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களை,
250 ஆக உயர்த்த, அனுமதி அளிப்பது தொடர்பாக, மூன்று பேர் கொண்ட, எம்.சி.ஐ.,
குழு, இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வின் இரண்டாம் நாளான நேற்று, இக்குழு, சென்னை மருத்துவக்
கல்லூரிக்கு, சென்ட்ரலில் கட்டப்பட்டுள்ள, புதிய கட்டடம், கல்லூரி மாணவ,
மாணவியர் விடுதிகள் ஆகிய இடங்களில், ஆய்வு நடத்தியது.
கல்லூரி முதல்வர், பல்வேறு துறை பேராசிரியர்களுடனும், ஒரு மணி
நேரத்திற்கும் மேல், ஆலோசனை நடத்தியது.எம்.சி.ஐ., குழுவின் ஆய்வறிக்கை
ஓரிரு நாளில் தரப்படும். ஆய்வில், இக்குழு திருப்தி அடைந்துள்ளதால்,
இம்முறை, எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதி
கிடைக்கும் என, கல்லூரி நிர்வாகம் நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment