அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாதச்
சம்பளத்துக்காக மட்டும் தமிழக அரசின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 42 சதவீதம்
செலவிடப்படுவதாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம்
தெரிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டுக்கான (2013-2014) வரவு- செலவு திட்ட மதிப்பீட்டில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்காக ரூ.49 ஆயிரத்து 687 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 13 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், ஏழு லட்சம் பேர் ஓய்வூதியதாரர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கான சம்பளங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியப் பலன்களாக மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம் செலவிடப்படுகிறது.
சட்டப் பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் பிரதான அம்சங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அந்தத் துறையின் செயலாளர் க.சண்முகம் அளித்த பேட்டி:
பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வரும் நிதியாண்டுக்கான (2013-14) நிதிநிலை அறிக்கையின் மொத்த அளவு ஒரு லட்சத்து 41,518 கோடியாகும். இது, கடந்த ஆண்டைவிட ரூ.19,852 கோடி கூடுதலாகும்.
வருவாய் உபரி அதிகரிக்கும்: வரும் நிதியாண்டில் மாநில வரிகள் மூலமாக ரூ.86,065 கோடி வருவாயும், வரிகள் இல்லாத வகைகள் மூலம் ரூ.6,765 கோடியும், மத்திய அரசின் வரிகள் மூலம் ரூ.17,285 கோடியும், மானியங்களாக ரூ.8,463 கோடியும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட நிலையிலேயே கடன் அளவு இருக்கும். அனுமதிக்கப்பட்ட ரூ.24,263 கோடியில், ரூ.21,142 கோடியை உத்தேசிக்கப்பட்ட கடன் அளவாகப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மொத்த பட்ஜெட்டில், வரவுகளில் செலவுகளைக் கழித்தால் வருவாய்க் கணக்கில் உபரியாக ரூ.664.06 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் அளவான ரூ.451.52 கோடியைக் காட்டிலும் அதிகமாகும்.
வருவாய் உபரி அதிகரிக்கும்போது நாம் கடன் வாங்கும் அளவு குறையும். அதன்படி, வருங்காலத்தில் தமிழகத்தில் வருவாய் உபரி அதிகரித்து கடனின் அளவு குறைக்கப்படும்.
டாஸ்மாக் மூலம் வருவாய்: தமிழகத்தில் வணிக வரிகள் மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.47 ஆயிரம் கோடி கிடைக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரியுடன் முடிந்த காலத்தில் வரிகள் வழியாக ரூ.37,610 கோடி கிடைத்துள்ளது. டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு கலால் வரியாக நடப்பு நிதியாண்டில் ரூ.12,473 கோடி கிடைக்கும் என மதிப்பிட்டிருந்தபோதும் கடந்த ஜனவரி வரையிலான காலத்தில் ரூ.9,522 கோடி கிடைத்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவை அடைவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வரும் நிதியாண்டில் (2013-2014) ரூ.14,469 கோடி ஆயத்தீர்வை வரி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் முத்திரைத் தாள் விற்பனை உள்ளிட்டவற்றிலும் நிர்ணயித்த இலக்கு எட்டப்படும். தமிழகத்தில் வரிகளை வசூலிப்பதில் சிறப்பான முறை பின்பற்றப்படுவதால் எந்தத் தொய்வும் இல்லாமல் வரிகளை வசூலிக்க முடியும்.
சமூக நலத் திட்டங்களுக்கு நிதி: விலையில்லாத அரிசி, மடிக்கணினி உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.43,449 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மொத்த பட்ஜெட்டில் 31 சதவீதமாகும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியமாக மொத்த பட்ஜெட்டில் 42 சதவீதம் செலவிடப்படுகிறது. அதாவது, ரூ.49 ஆயிரம் கோடி அளவுக்கு ஊதியத்துக்காக அளிக்கப்படுகிறது. புதிய பணியிடங்களைத் தோற்றுவித்தது, பணியாளர்கள் தேர்வு போன்ற காரணங்களால் ஊதியம் வழங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதற்கான செலவும் உயரும் என நிதித் துறை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்

No comments:
Post a Comment