கடந்த இரண்டு ஆண்டுகளில், 22 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளும், ஒரு அரசு
பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளதாக, பட்ஜெட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது. 2013-14ம் ஆண்டில், புதிய கல்லூரிகள் துவங்குவது
குறித்து, எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
பிளஸ் 2 முதல் தலைமுறை
பட்டதாரிகளுக்கு, கல்வி கட்டணச் சலுகை அளிப்பதற்காக, நடப்பு ஆண்டில், 673
கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 10.76 லட்சம்
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த
போதும், 4.86 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே, இலவச மடிக்கணினி வழங்கப்பட்டன.
இந்த நிலையில், நடப்பு ஆண்டில், 5.65 லட்சம், மடிக்கணினிகள்
வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டு உள்ளது. இதற்காக, 1,500 கோடி ரூபாய்,
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களைத் தவிர, வேறு எந்த
திட்டமும், உயர்கல்வித் துறையில் இடம்பெறவில்லை.
No comments:
Post a Comment