பிளஸ் 2 உயிரியல் தேர்வில், ஆங்கில வழி தாவரவியல் ஒரு மதிப்பெண்
வினாவில், எழுத்துப்பிழை உள்ளது. இதனால், மதிப்பெண் குறையும் வாய்ப்பு
ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
அரசு மேல்நிலை பொதுத்தேர்வு இயக்குநருக்கு உடுமலை பகுதி முதுகலை ஆசிரியர்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனு:
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 21ம் தேதி உயிரியியல் தேர்வு நடந்தது. இதில், ஆங்கில வழி தாவரவியல் "ஏ&' டைப் வினாவில், பகுதி எண் 1ல் ஒரு மதிப்பெண் வினா கேட்கப்பட்டுள்ளது; வினா எண் 14க்கு சரியான விடை, தவறாக அச்சிடப்பட்டுள்ளது.
இதனால், மையக் கருத்தே மாறுபடுவதால், மாணவர்களிடையே குழப்பமடைந்து தவறான விடையை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வினாவிற்குரிய ஒரு மதிப்பெண்ணை இழக்க நேரிடும் நிலை உள்ளது. ஒரு மதிப்பெண் குறைந்தாலும், மருத்துவப்படிப்பில், சேர்வதற்கு 0.5மதிப்பெண் கட்ஆப் குறைந்து கிடைக்க வேண்டிய படிப்போ, கல்லூரி கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு சாதகமாக மதிப்பெண்களை வழங்கிட வேண்டும், &' இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. ஒரு மதிப்பெண் வினாவில், விடையே தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளதால், மதிப்பெண் குறைந்து விடுமோ என மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment