சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியின், முதுகலை தேர்வு முடிவுகள், வரும் 25ம் தேதி வெளியிடப்பட உள்ளன.
சென்னை பல்கலை, தொலைதூர கல்வியின், எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., உள்ளிட்ட, முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், வரும் 25ம் தேதி வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை, www.unom.ac.in உள்ளிட்ட இணையதளம் மூலம், மாணவர்கள் பெறலாம்.
தேர்வு மதிப்பெண் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், www.ideunom.ac.in என்ற இணைய தளத்திலிருந்தும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ஏப்ரல், 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தொலைதூர கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment