அருப்புக்கோட்டை நகராட்சியில் இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
நகராட்சி தலைவர் சிவபிரகாசம் கூறியதாவது: அருப்புக்கோட்டை
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இளையோர்களுக்கு, பொன்விழா ஆண்டு
நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தி கீழ், இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட
உள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்த்தல், கேட்டரிங்,
நர்சிங், ஓட்டுனர் பயிற்சி, தையல், அழகு கலை பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட
உள்ளன. பயிற்சி பெற விரும்புவோர், 18 வயதிற்கு மேல் 32 வயது வரை உள்ள
ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கை, மாற்று திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுனர் பயிற்சிக்கு 8 வது தேர்ச்சி அல்லது தோல்வி, இதர
பயிற்சிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப அட்டை
நகல், போட்டோ, கல்விசான்றிதழ்களுடன் நகராட்சி அலுவலகத்தில் மார்ச் 28,29
இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முகாமில் கலந்து
கொள்ளலாம், என அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment