"கால்நடை மற்றும் வேளாண் அறிவியல் படிப்பு முடித்தால் உடனடி
வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன" என்று, மதுரையில் நடந்த தினமலர்
வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் தெரிவித்தனர்.
கால்நடை அறிவியல் கல்வி
எதிர்காலம் பற்றி டாக்டர் முருகானந்தம் பேசியதாவது: மருத்துவ படிப்பிற்கு
இணையாக கால்நடை அறிவியல் படிப்புகள் கருதப்படுகின்றன. தமிழகத்தில்
ஆண்டுதோறும் 260 கால்நடை மருத்துவர்கள் படித்து வெளியேறுகின்றனர்.
இப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு மே மாதம் வழங்கப்படும்.
திருப்பரங்குன்றம் கால்நடை ஆராய்சி மையம் உட்பட 4 மையங்களில்
வழங்கப்படும். இப்படிப்பை முடித்தவுடன் அரசு மற்றும் தனியார் மையங்களில்
வேலைகள் காத்திருக்கின்றன. சொந்தமாகவும் கிளினிக் வைக்கலாம்.
முதுகலை படிப்பு முடித்தால் பல்கலைகளில் பேராசிரியர்களாக பணியில்
சேரலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகள் எழுத விருப்பமுள்ள அதிகமாக
மாணவர்கள் இத்துறையை தேர்வு செய்கின்றனர். வெளிநாட்டு கால்நடை
பல்கலைகளிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இதுதவிர ஆவின், வங்கி
துறையிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
வேளாண் அறிவியல்: வேளாண் அறிவியல் குறித்து, கோவை
வேளாண் பல்கலை துணை பேராசிரியர் சுதாகர் பேசியதாவது: வேளாண் சார்ந்த
படிப்புகளுக்கு தற்போது சிறப்பான எதிர்காலம் காத்திருக்கின்றது. 2030ம்
ஆண்டில் உலகில் உணவு பஞ்சம் ஏற்படப்பபோவதாக உலக சுகாதார ஆய்வு ஒன்று
தெரிவித்துள்ளது.
மேலும், பெட்ரோலுடன் 15 சதவீதம் எத்தனால் கலக்கலாம் என, மத்திய அரசு
அறிவித்துள்ளது. எத்தனால் என்பது உணவு கழிவுகளில் இருந்து தயாரிப்பது.
எனவே, வரும் காலங்களில் வேளாண் துறை ஒரு சவால் நிறைந்தாக இருக்கும்.
இதற்காக அதிக எண்ணிக்கையில் வல்லுனர்கள் தேவையாக இருப்பார்கள்.
மேலும், பி.எஸ்சி., தோட்டக்கலை, பி.டெக் (அக்ரி), வனஇயல்,
பட்டுப்புழுவியல் போன்ற படிப்புகளும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை
உருவாக்கும். "ஆன்லைனில்" தான் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment