ரயிலில் அனுப்பப்பட்ட 10ம் வகுப்பு விடைத்தாள்கள் சேதமடைந்த சம்பவத்தில்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது என தேர்வுத்துறை
அறிவித்துள்ளது. சிதம்பரத்தையடுத்த பி.முட்லூர் மையத்தில் தமிழ் இரண்டாம்
தாள் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டைக்கு ரயிலில் அனுப்பப்பட்டது.
அப்போது விருத்தாசலம்
ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் விடைத்தாள்கள் விழுந்து சேதமடைந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்றும்,
அவர்கள் தமிழ் முதல்தாளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இரண்டாம்
தாளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment