* உடலுக்கு ஊட்டத்தைத் தரும் பொருள்களை உணவு என்கிறோம்.
* உணவில், உடலுக்குத் தேவையான சத்துக்களையே ஊட்டச்சத்துகள் எனக் கூறுகிறோம்.
* உடலுக்கு ஆற்றல் அளிப்பவை - கார்போஹைட்ரேட்டுகள். கொழுப்பு.
* வளர்ச்சியை அளிக்கக் கூடியவை - புரதங்கள்
* உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துபவை - வைட்டமின்கள்
* உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை - தாது உப்புகள்
* உணவைக் கடத்தவும், உடல் வெப்பத்தை ஒழுங்குப்படுத்துபவை - நீர்
* வெள்ளரிக்காயின் நீரின் அளவு - 95 சதவிகதம்
* பாலில் நீரின் அளவு - 87 சதவிகதம்
* முட்டையில் உள்ள நீரின் அளவு - 73 சதவிகதம்
* காளானில் உள்ள நீரின் அளவு - 92 சதவிகதம்
* உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு - 75 சதவிகதம்
* தர்பூசணியில் உள்ள நீரின் அளவு - 99 சதவிகதம்
* ஒரு துண்டு ரொட்டியில் உள்ள நீரின் அளவு - 25 சதவிகதம்
* காய்கறிகள், பழங்களை நறுக்கிய பின் கழுவினால், அவற்றில் உள்ள வைட்டமின் சத்துக்கள் இழக்கப்படுகிறது.
* காய்கறிகள், பழங்களின் தோல்களில் அதிகயளவில் வைட்டமின்கள், தாது உப்புகள் காணப்படுகின்றன.
* வைட்டமின் D சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது.
* வைட்டமின் A குறைப்பாட்டினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் B குறைப்பாட்டினால் பெரி-பெரி என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் C குறைப்பாட்டினால் ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் D குறைப்பாட்டினால் ரிக்கட்ஸ் என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் E குறைப்பாட்டினால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.
* வைட்டமின் K குறைப்பாட்டினால் இரத்தம் உறையாமை ஏற்படுகிறது.
* புரதம் குறைபாட்டினால் குவாஷியோர்கள், மராஸ்மஸ் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
* கால்சியம் குறைப்பாட்டினால் எலும்பு மற்றும் பல் சிதைவு ஏற்படுகிறது.
* இரும்பு சத்து குறைப்பாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
* அயோடின் குறைப்பாட்டினால் முன்கழுத்து கழலை ஏற்படுகிறது.
* அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவே சரிவிகித உணவாகும்.
* ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்பதால் குறைபாட்டு நோய்களைத் தவிர்க்கலாம்.
* சூரிய ஒளி, கரியமில வாயு, நீர், பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தாவரங்கள் ஸ்டார்ச் (சர்க்கரை) தயாரிப்பது - ஒளிச்சேர்க்கை
* உணவூட்டம் என்பது - உணவை உட்கொள்ளுதல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாக்குதல் என பல நிலைகளை உடையது.
* தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல் - தற்சார்பு ஊட்ட முறை.
* தற்சார்பு ஊட்ட முறைக்கு எடுத்துக்காட்டு - பசுந்தாவரங்கள், யூக்ளினா
* ஒட்டுண்ணி உணவூட்டத்துக்கு எடுத்துக்காட்டு -கஸ்க்யூட்டா
* கஸ்க்யூட்டாவின் அறிவியல் பெயர் - கஸ்க்யூட்டா ரிஃளெக்ஸா( ஊர்களில் அழைக்கப்படும் பெயர்- அம்மையார் கூந்தல், சடதாரி, தங்கக்கொடி)
* புற ஒட்டுண்ணிகள் - பேன், அட்டைப்பூச்சி
* அக ஒட்டுண்ணி - உருளைப்புழு
* சாறுண்ணி - காளான்
* தாவரங்களை மட்டுமே உண்பது தாவர உண்ணி (ஆடு, மாடு)
* விலங்குகளை மட்டுமே உண்பது மாமிச உண்ணி (புலி)
* தாவரங்களையும், விலங்குகளையும் உண்பது அனைத்து உண்ணி (காகம்)
* பூச்சி உண்ணும் தாவரம் - நெப்பந்தஸ், டிரோசீரா, யுட்ரிகுலேரியா
* ஸ்கர்வி நோய்க்கான அறிகுறி - பல் ஈறுகளில் இரத்தம் வடிதல்
* ரிக்கட்ஸ் நோய்க்கான அறிகுறி - வலிமையற்ற வளைந்த எலும்பு
* மலட்டுத் தன்மைக்கான அறிகுறி - குழந்தையின்மை, நோய் எதிர்ப்பு தன்மை குறைதல்
* இரத்தம் உறையாமைக்கான அறிகுறி - சிறிய காயம் ஏற்படும்போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல்.
* முன்கழுத்து கழலை நோய்க்கான அறிகுறி - கழுத்துப் பகுதியில் வீக்கம் காணுதல்
* இரத்த சோகை நோய்க்கான அறிகுறி - மயக்கம் வருதல், உடல் சோர்வு.
* எலும்பு மற்றும் பல் சிதைவு நோய்க்கான அறிகுறி - எலும்பு, பற்களின் வலிமை குறைதல்.
* மாலைக்கண் நோய்க்கான அறிகுறி - பார்வைக் குறைபாடு, மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடியாமை.
* பெரி-பெரி நோய்க்கான அறிகுறி - ஆரோக்கியமற்ற நரம்பு, தசைச் சோர்வு.
* மராஸ்மஸ் நோய்க்கான அறிகுறி - குச்சி போன்ற கை, கால்கள், மெலிந்த
தோற்றம், பெரிய தலை, எடைக் குறைவு, உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைதல்.
* குவாஷியோர்கள் நோய்க்கான அறிகுறி - வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு, கை மற்றும் கால்களில் வீக்கம்.
No comments:
Post a Comment