ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், உலக கவிதை தினம் ஊட்டி டேவிஸ் பூங்காவில் நடந்தது.
நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் கவியரங்கம் சிறப்பு
விருந்தினராக, வாசமல்லி பங்கேற்று பழங்குடியின மக்களின் முதன்மையான தோடரின
பாடலுடன் துவக்கி வைத்தார். "பசுமை சொர்க்கம்" என்ற தலைப்பில் பாடல்
பாடப்பட்டது.
கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் பேசுகையில், "உலகின் மாற்றம்
என்னும் எழுத்தும் என்பது அனைவரும் அறிந்தாலும் கவிதைகள் காலத்தின்
கண்ணாடி," என்றார். சங்க தலைவர் ஜனார்தனன் பேசுகையில், "உலகெங்கும்
வாழ்வியலை பிரதிபலிக்கும் நாட்டுப்புற இலக்கியங்கள் பெரும்பாலானோர்
அறியாமல் செவிவழி இலக்கியங்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளன. கவிதை கட்டுரை,
கதை என படைப்பிலக்கியங்கள் பெருக பள்ளி கல்லூரிகள் ஆர்வம் காட்டாதது
வருத்தம் அளிக்கிறது," என்றார்.
கவிஞர் ஜேபி, ராஜுபெட்டன், அமுதவல்லி, கமலம், பிரபு,
நாகராஜன், மாரிமுத்து, சமன்குமார், சதாசிவம், லசி, பெள்ளி, குருசசிம உட்பட
பலர் கவிதை வாசித்தனர். ரவீந்திரநாத்தாகூர், கண்ணதாசன், பட்டுகோட்டை கல்யாண
சுந்தரம், புதுமைபித்தன், பாரதியார், பாரதிதாசன் உட்பட கவி முன்னோர்களின்
நினைவு கூறப்பட்டது.
No comments:
Post a Comment