"மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் மரம் நட்டு, அதற்கு உங்கள்
பெயரையே சூட்டுங்கள்," என்று, மதுரையில் நடந்த வனப்பாதுகாப்பு விழாவில்
வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், சேதுபதி பள்ளியில்
வனப்பாதுகாப்பு விழா, மதுரை கல்லூரி வாரிய உறுப்பினர் அமுதன் தலைமையில்
நடந்தது. தலைமையாசிரியர் பாலகுருநாதன் வரவேற்றார்.
சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி பேசியதாவது: உலக
அளவில் 60 ஆயிரம் வகையான மரங்கள், 47 ஆயிரம் வகையான விலங்கினங்கள் உள்ளன.
30 சதவீதம் காடுகள் உள்ளன. இவற்றை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின்
கடமையாகும். புவி வெப்பமயமாதல் நமக்கு முன் உள்ள பெரிய சவால்.
இதற்கு மரங்கள் நடுவதே தீர்வு. மாணவர்கள் ஒவ்வொருவரும்
தங்களது பிறந்த நாளில் ஒரு மரத்தை நட்டு, அதை பராமரிக்க வேண்டும்.
நடப்படும் மரத்திற்கு அவர்கள் பெயரையே சூட்ட வேண்டும். மரம் நடுதல்
தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களிடையே, ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்,
என்றார். தேசிய பசுமைப்படை பொறுப்பாளர் அகிலாண்டேஸ்வரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment