சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனங்களின், இளங்கலை தேர்வுக்கு,
வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை, தொலைநிலை கல்வியின், பி.ஏ., - பி.காம்., உள்ளிட்ட,
இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள், வரும் மே மாதத்தில் நடக்க உள்ளது.
தேர்வுகளுக்கு, வரும் 2ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள், வரும் 9ம் தேதி வரை, அபராதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள், www.ideunom.ac.in என்ற இணையதளத்திலிருந்து, விண்ணப்ப படிவங்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இளங்கலை தேர்வுகள், மே மாதம், 24ம் தேதியிலிருந்து துவங்க உள்ளதென,
சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள, செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment