"விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் சேதம் அடைந்த
விவகாரத்தில், மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது. தமிழ் முதற்தாளில், மாணவர்கள்
எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ, அதே மதிப்பெண்கள், இரண்டாம்
தாளுக்கும் வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி
தெரிவித்துள்ளார்.
pack
:
நாளை சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை
தமிழக அரசின் 2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 21ம் தேதி சட்டசபையில்
தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4
நாட்கள் சட்டசபையில் பொது விவாதம் நடந்தது.
குரூப் 4ல் தேர்வான 210 சர்வேயர்கள் ஓட்டம்: நிலஅளவை பயிற்சியில் அதிகாரிகள் அதிர்ச்சி
குரூப் 4ல் தேர்வான, 210 சர்வேயர்களுக்கு, குரூப் 2ல் அதிகாரமிக்க பதவி
கிடைத்ததால், நிலஅளவை பயிற்சியில் கலந்து கொள்ளாமல் ஓட்டம் பிடித்தனர்.
கடந்தாண்டு ஜூலையில், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்,
சர்வேயர், டிராப்ட்மேன் ஆகிய காலிப்பணியிடத்துக்கு, 10,718 பேருக்கான
தேர்வு நடந்தது.
அனைத்து வசதிகளையும் கொண்ட அதிசய கிராமம் கங்கதேவி பள்ளி
ஆந்திராவில், ஒரு அதிசய கிராமம் உள்ளது. அனைத்து உள்கட்டமைப்பு
வசதிகளுடன், 24 மணி நேர மின் வினியோகத்துடன், சுத்தம், சுகாதாரத்துடன்
விளங்கும் இந்த கிராமம், நாட்டின் முன்னணி கிராமங்களில் ஒன்றாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல விருதுகளைப் பெற்றுள்ள இந்த கிராமத்தின்
தலைவர், சந்திர மவுலி, நேபாள நாட்டின் சிறப்பு விருந்தினராக
அழைக்கப்பட்டுள்ளார்.
இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு
பள்ளி கல்வித் துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி
உயர்வு செய்யப்பட்டனர். நேரடி தேர்வு மூலம், உதவியாளர் பணியிடம் தேர்வு
செய்யப்படுவது இல்லை. இளநிலை உதவியாளர்களில் இருந்து, பணிமூப்பு
அடிப்படையில், உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்
வகுப்பைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சுப் பயிற்சி
அளிப்பதற்காக, பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள, கலை, அறிவியல் கல்லூரிகளில்,
இலவசமாக கல்வி கற்க, சென்னை பல்கலைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், செயல்பட்டு
வந்த சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, வீட்டின்
அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது
ரயிலில் அனுப்பப்பட்ட 10ம் வகுப்பு விடைத்தாள்கள் சேதமடைந்த சம்பவத்தில்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது என தேர்வுத்துறை
அறிவித்துள்ளது. சிதம்பரத்தையடுத்த பி.முட்லூர் மையத்தில் தமிழ் இரண்டாம்
தாள் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டைக்கு ரயிலில் அனுப்பப்பட்டது.
கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை
விருத்தாசலம் அருகே விடைத்தாள்கள் ரயில்
தண்டவாளத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர்
வசுந்தரா தேவி கூறும்போது, விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததாக
எனக்கும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரித்து அறிக்கை
அளிக்கும்படி கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ்,
மாவட்டக் கல்வி அலுவலர் வடிவேலு ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி - ஜி. ராமகிருஷ்ணன்
கல்வி கற்பதற்கான உரிமைக் குறியீடுகளை எய்துவது
குறிப்பாக மொத்தப் பள்ளிச் சேர்க்கை மற்றும் இடை நிற்றல் அளவுகளில் மிகச்
சிறப்பாகக் கருதப்படும் மாநிலங்களுள் தமிழகம் ஒன்று என மாநில நிதியமைச்சர்
சமர்ப்பித்த நடப்பாண்டுக்கான ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வி
குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு
வரும் 1ம் தேதி முதல், பிபிஎப் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு
திட்டத்துக்கான வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி
அறிவித்துள்ளது.
கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
"மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்லூரிகளை உடனடியாக திறக்க
வேண்டும்" என, மாணவர்கள் கூட்டமைப்பினர், அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்.
வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்
தமிழகத்தில் அரசு பொது தேர்வு வினாத்தாள் கண்காணிப்பு குழுவில், மாணவர்களும் இந்தாண்டு முதல், சேர்க்கப்பட்டுள்ளனர்.
"விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை"
"விடைத்தாள், ரயில் பாதையில் கிடந்த விவகாரத்தில், தேர்வு துறையின்
தவறுகள் எதுவும் இல்லை" என அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்
பார்சலில் அனுப்பப்பட்ட, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்
தாள்கள், ரயில் பாதையில் சிதறிக் கிடந்ததால், விருத்தாசலம் ரயில்
நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
2 லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்
"அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், 47 ஆயிரத்து 273
பேர் நியமிக்கப்பட உள்ளனர்" என, அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.
எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்பில் சேர இணையத்தில் விண்ணப்பம்
அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளில் சேர, பல்கலை
இணையதளம் வழியாக, ஏப்., 13ம் தேதி வரை, பதிவு செய்யலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு
கல்வி உரிமை சட்டத்தை (ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து
மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த
உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது.
கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்படாததால் பள்ளிகளில் மீண்டும்
குழந்தைகள் சேர்க்கை அளவு குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி.,
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி.,
முதன்மைத் தேர்வில் செய்யப்பட இருந்த மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., வாபஸ்
பெற்றது. ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு, கடும்
எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த முடிவை எடுத்தது.
10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு
10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற தமிழ் 2ஆம் தாள் தேர்வில்,
வினாத்தாளுடன் இணைத்து கொடுக்க வேண்டிய படிவம் கொடுக்கப்படாததால் பல
பள்ளிகளில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் வினாவினை எழுத
முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுகள் துறை
இயக்குனர் அறிவித்துள்ளார்.
கல்வி கடன் பெற எளிய வழி என்ன?
மதுரையில் "தினமலர்" சார்பில் நேற்று நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில்
மாணவர்களுக்கு கல்வி கடன் எளிய வழியில் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து
மதுரை கனரா வங்கி சீனியர் மேனேஜர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாதாந்திர கட்டணம் உயர்வு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாதாந்திர கட்டணங்கள், வரும், ஏப்ரல்
மாதம் முதல் உயர்த்தப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை,
கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனினும், டியூஷன் கட்டணங்களில், எவ்வித
மாற்றமும் இல்லை.
10ம் வகுப்பு வினாத்தாளில் "பார் கோடு'
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது.
வினாத்தாள்கள், அந்தந்த கல்வி மாவட்ட மையங்களுக்கு, பத்து நாட்களுக்கு
முன்பு அனுப்பப்படும். ஒவ்வொரு மையங்களுக்கும், பணி மூப்பு அடிப்படையில்
இரு தலைமை ஆசிரியர்கள் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் : டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு கடிதம்
தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் போட்டித் தேர்வுகளில்
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு தமிழக அரசு கடிதம்
எழுதியிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்
தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனங்களின், இளங்கலை தேர்வுக்கு, வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனங்களின், இளங்கலை தேர்வுக்கு,
வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது"
"உடம்பில் வெண்புள்ளிகள் உள்ளதை காரணங்காட்டி, மாணவர்களை பள்ளி நிர்வாகம்
பாரபட்சமாக நடத்தக்கூடாது" என, பள்ளிக் கல்வி துறை செயலர்
உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, எழுதிய மாணவர்கள்
மதிப்பெண் சான்றிதழை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்று
கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு போனஸ் மதிப்பெண்?
பிளஸ் 2 கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளுக்கு, போனஸ் மதிப்பெண்கள்
வழங்க வேண்டும் என, சட்டசபையில் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதனால்,
கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு
தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச இட வசதியை ஏற்படுத்தாத தனியார்
பள்ளிகள் பிரச்னை குறித்து, ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன்
தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இக்குழு, மூன்று மாதங்களில், தமிழக அரசுக்கு, அறிக்கையை வழங்கும் என,
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சி.ஏ., படித்தால் வளமான எதிர்காலம்: வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்
"பிளஸ் 2 முடித்து சி.ஏ., (பட்டய கணக்காயர்) படிப்பை தேர்வு செய்தால்,
அதிக சம்பளத்துடன் வளமான எதிர்காலம் அமையும்" என, ஆடிட்டர் சரவணபிரசாத்
தெரிவித்தார்.
"கால்நடை, வேளாண் அறிவியல் படிப்புகளுக்கு காத்திருக்கு வேலை"
"கால்நடை மற்றும் வேளாண் அறிவியல் படிப்பு முடித்தால் உடனடி
வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன" என்று, மதுரையில் நடந்த தினமலர்
வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் தெரிவித்தனர்.
எதிர்காலத்திற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்வு செய்வது எப்படி?
எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புக்களை எவ்வாறு
தேர்வு செய்வது என்று, மதுரையில் நேற்று நடந்த தினமலர் வழிகாட்டி
நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கினார்.
யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
டிசம்பர் மாதம் 8 இலட்சம் பேர் எழுதிய யூ.ஜி.சி - நெட் தேர்வின் முடிவுகள் திங்கட்கிழமை இரவு வெளியானது.
இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?
கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு
வருவதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை,
மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது.
இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள்
ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிகளில் பொதுத்தேர்வு எதிரொலி: பேரணி, கருத்தரங்குக்கு தடை வருமா?
"பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், பள்ளி மற்றும்
கல்லூரி மாணவ, மாணவியர் பங்குபெறும், பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள்
மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என, பெற்றோர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லாததால் தனியார் பள்ளி மூடல்
திண்டுக்கல்லில் பள்ளியை திடீரென மூடுவதாக நிர்வாகம்
அறிவித்துள்ளதால், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் படிப்பு
கேள்விக்குறியாகி உள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 10.68 லட்சம் பேர்,
தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம் தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2
பொதுத்தேர்வுகள், நாளையுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுகள், நாளை துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கின்றன.
கல்லூரி, பாடப்பிரிவு மட்டுமல்ல, திறனும் மிக முக்கியம்!
ஒவ்வோர் ஆண்டும் பள்ளிப் படிப்பை முடித்து, பொறியியல் படிப்பில் சேர
விரும்பும் மாணவர்களை சிலவிதமான சந்தேகங்கள் அலைகழிக்கின்றன. நான் எந்தப்
பிரிவை தேர்ந்தெடுத்துப் படிப்பது? பொறியியல் படிப்பில் நல்ல கல்லூரியில்
படிப்பதுதான் முக்கியமா? அல்லது குறிப்பிட்ட பாடப்பிரிவுதான் முக்கியமா?
என்ற குழப்பங்கள்தான் அவை.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி
ஓசூர் கல்வி மாவட்டத்தில், மாணவர்களின் நினைவாற்றலை
அதிகரிக்கவும், பரபரப்பு, அச்சமின்றி பொதுத்தேர்வுகள் எழுதவும், யோகா
பயிற்சி அளிக்கப்படுகிறது.
தரம் உயர்த்தி ஓராண்டாகியும் பயன் அடையாத பள்ளி
நெடுமானூரில் இடம் வழங்க மறுப்பதால் உயர்நிலைப் பள்ளியாக
தரம் உயர்த்தி, நிதி ஒதுக்கியும் இடம் இல்லாததால், புதிய கட்டடம் கட்ட
முடியாமல் இருக்கிறது, இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்
மூடப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை, மீண்டும் திறக்க வேண்டும் என, புளியம்பாக்கம் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில், புளியம்பாக்கம்
ஊராட்சி உள்ளது. இவ்வூராட்சியில் புளியம்பாக்கம், படவேட்டம்மன் பெரிய
மேட்டு காலனி, ஆதிவாசிகள் குடியிருப்பு உள்ளிட்ட துணை கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி மக்களின் கல்வித் தேவைக்காக, புளியம்பாக்கம் ரயில் இருப்பு பாதை
அருகே, தனியார் நிதி நாடும் பள்ளி உள்ளது.
படைப்பிலக்கியங்கள் பெருக பள்ளி கல்லூரிகள் ஆர்வம் காட்டவேண்டும்
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், உலக கவிதை தினம் ஊட்டி டேவிஸ் பூங்காவில் நடந்தது.
இலவச தொழிற் பயிற்சி
அருப்புக்கோட்டை நகராட்சியில் இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்
மாணவர்கள் போராட்டங்கள் குறைந்து வரும் நிலையில், இன்று கல்லூரி
திறக்கப்படும் என, மாணவர்களிடம் பரவிய குறுஞ்செய்தியால், கல்லூரி திறப்பு
குறித்த விவரம் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்படுமா?
இந்திய மருத்துவ கவுன்சில் குழுவின் ஆய்வு முடிந்துள்ள நிலையில், சென்னை
மருத்துவக் கல்லூரி, எம்.பி.பி.எஸ்., இடங்கள், அதிகரிக்கப்படுமா என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் மையங்களில் போராட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிளஸ் 2 விடைத்தாள்
திருத்தும் மையங்களில் போராட்டம் நடத்த தமிழ்நாடு முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு
"பிளஸ் 2 பொதுத் தேர்வை போல், பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கான
விடைத்தாள் நகல்களும் வழங்க தேர்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று,
மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்
கடந்த ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக,
அரசாணை வெளியிடப்பட்டது. அதன் படி, அரசு மற்றும் சுயநிதி, சிறுபான்மை
கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்
பயன்பெறும் வகையில், அவர்கள் அனைத்து கட்டாய கட்டணங்களை செலுத்த தேவையில்லை
என, அறிவிக்கப்பட்டது.
எம்.பில், பி.எச்டி படிப்பில் மாணவர் சேர்க்கை
புது தில்லியிலுள்ள National University of
Educational Planing and Administration-ல் எம்.பில் மற்றும் பி.எச்டி
படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தேர்வுத்துறை நடவடிக்கையால் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம்
தேர்வுத் துறையின் குளறுபடியான உத்தரவால், தேர்வுப் பணிகளுக்குச்
செல்வதா, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்குச் செல்வதா என, தெரியாமல்,
முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.
கல்வித் துறைகளில், ஆசிரியர் பணி, ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட, பல்வேறு
வேலைவாய்ப்புகளை, இணையதளம் வழியாக பெறுவதற்கு, யு.ஜி.சி., ஏற்பாடு
செய்துள்ளது. இதற்கென, தனி இணையதளத்தை துவக்கி உள்ளது.
கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு
இலங்கையில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு
மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில்,கல்லூரி மாணவர்கள், தொடர்
போராட்டத்தில், ஈடுபட்டுள்ளனர்.
ஜூனியர் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டம்; சீனியர்களுக்கு வெளியூரா?
தமிழகத்தில் ஜூனியர் இடைநிலை ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணியாற்ற
வாய்ப்பும், சீனியர் ஆசிரியர்கள் தொலைதூர மாவட்டங்களிலும்
நியமிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை பல்கலை தொலைதூர கல்வி முடிவுகள் 25ல் வெளியீடு
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியின், முதுகலை தேர்வு முடிவுகள், வரும் 25ம் தேதி வெளியிடப்பட உள்ளன.
மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் மரக்கன்று நடுங்கள்
"மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் மரம் நட்டு, அதற்கு உங்கள்
பெயரையே சூட்டுங்கள்," என்று, மதுரையில் நடந்த வனப்பாதுகாப்பு விழாவில்
வலியுறுத்தப்பட்டது.
பகுதிநேர பி.இ.,-பி.டெக்., படிப்பு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பம்
2013-14ம் ஆண்டில் பகுதி நேர பி.இ.,-பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்கான
விண்ணப்பங்கள், ஏப்ரல், 1ம் தேதி முதல், 15ம் தேதி வரை, 10 பொறியியல்
கல்லூரிகளில் வழங்கப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்
அறிவித்துள்ளது.
அசுர வேகத்தில் செல்லும் பள்ளி வாகனங்கள்: கிடப்பில் போடப்பட்ட தமிழக அரசின் உத்தரவு
பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாமல்,
குளித்தலை பகுதியில் அசுர வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம்
உள்ளது.
பிளஸ் 2 உயிரியல் தேர்வு வினாத்தாளில் எழுத்துப்பிழை
பிளஸ் 2 உயிரியல் தேர்வில், ஆங்கில வழி தாவரவியல் ஒரு மதிப்பெண்
வினாவில், எழுத்துப்பிழை உள்ளது. இதனால், மதிப்பெண் குறையும் வாய்ப்பு
ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு
யூ.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்மை தேர்வை தங்களின் பிராந்திய மொழிலேயே தேர்வாளர்கள் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே எழுத வேண்டும் என மார்ச் 5ம் தேதி யூ.பி.எஸ்.சி., அறிவித்திருந்ததற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து எழுந்த கடுமையாக எதிர்ப்பை அடுத்து யூ.பி.எஸ்.சி., தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
"அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்"
"அரசுத் துறைகளில், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து,
புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, இனி, தேர்ச்சி சதவீதம்
அதிகரிக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் நடராஜ் கூறினார்.
தமிழக பட்ஜெட்டில் உயர்கல்வி துறைக்கு ஏமாற்றம்
கடந்த இரண்டு ஆண்டுகளில், 22 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளும், ஒரு அரசு
பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளதாக, பட்ஜெட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது. 2013-14ம் ஆண்டில், புதிய கல்லூரிகள் துவங்குவது
குறித்து, எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
அரசு ஊழியர், ஆசிரியர் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் 42% செலவு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாதச்
சம்பளத்துக்காக மட்டும் தமிழக அரசின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 42 சதவீதம்
செலவிடப்படுவதாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம்
தெரிவித்துள்ளார்.
நுழைவுத்தேர்வுகளுக்கு உதவும் ஆன்லைன் தேர்வுகள்!
நேரம் நிர்ணயித்து எழுதிப்பார்க்கும் தேர்வுக்கு முந்தைய மாதிரித்
தேர்வுகள், உங்களின் சுய மதிப்பீட்டிற்கு சிறந்த அளவுகோல்களாக திகழ்கின்றன.
தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?
இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: மரம்: அறிவியல் வினா - விடை
* காற்றை தூய்மைப் படுத்துவது - மரங்கள்.
* நமது வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல், நாற்காலி போன்ற பெரும்பாலான பொருள்கள் செய்ய தேவைப்படுவது - மரக்கட்டைகள்.
* இரயில் படுக்கைகள், படகுகள் செய்யப் பயன்படும் மரம் - பைன் மரம்.
* மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம் - கருவேல மரம்
* தைலம், காகிதம் செய்யப் பயன்படும் மரம் - யூகலிப்டஸ்
* தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுபொம்மைகள், பஞ்சு மெத்தைகள், தலையணை செய்யப் பயன்படும் மரம் - இலவம் மரம்.
* நமது வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல், நாற்காலி போன்ற பெரும்பாலான பொருள்கள் செய்ய தேவைப்படுவது - மரக்கட்டைகள்.
* இரயில் படுக்கைகள், படகுகள் செய்யப் பயன்படும் மரம் - பைன் மரம்.
* மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம் - கருவேல மரம்
* தைலம், காகிதம் செய்யப் பயன்படும் மரம் - யூகலிப்டஸ்
* தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுபொம்மைகள், பஞ்சு மெத்தைகள், தலையணை செய்யப் பயன்படும் மரம் - இலவம் மரம்.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: உடலியல்: அறிவியல் வினா - விடை
* உடலுக்கு ஊட்டத்தைத் தரும் பொருள்களை உணவு என்கிறோம்.
* உணவில், உடலுக்குத் தேவையான சத்துக்களையே ஊட்டச்சத்துகள் எனக் கூறுகிறோம்.
* உடலுக்கு ஆற்றல் அளிப்பவை - கார்போஹைட்ரேட்டுகள். கொழுப்பு.
* வளர்ச்சியை அளிக்கக் கூடியவை - புரதங்கள்
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: மாற்றம்: அறிவியல் வினா - விடை
* அழுத்திவிடப்பட்ட சுருள் கம்பியில் ஏற்படும் மாற்றம் - கால ஒழுங்கற்ற மாற்றம்
* உண்வு கெட்டுப்போதல் என்பது - விரும்பத்தகாத மாற்றம்.
* சலவை சோடா நீரில் கரைவது - விரும்பத்தகாத மாற்றம்
* இரவுபகல் தோன்றுதல் - கால ஒழுங்கற்ற மாற்றம்
* சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகவும் மாற்றமே - மெதுவான மாற்றம்.
* உண்வு கெட்டுப்போதல் என்பது - விரும்பத்தகாத மாற்றம்.
* சலவை சோடா நீரில் கரைவது - விரும்பத்தகாத மாற்றம்
* இரவுபகல் தோன்றுதல் - கால ஒழுங்கற்ற மாற்றம்
* சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகவும் மாற்றமே - மெதுவான மாற்றம்.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: ஒளியியல் : அறிவியல் வினா - விடை
ஒளியியல்
* பூமி நிலையாக இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற கோப்பர் நிக்கஸ் கருத்தினை யார் தன்னுடைய ஆய்வுகள் மூலம் நிரூபித்தார் - கலிலியோ.
* கி.பி.1609ஆம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் - கலிலியோ
* சூரிய ஒரு விண்மீன்; நிலவு கோளவடிவம் கொண்டது என கண்டுபிடித்தவர் - கலிலியோ.
* பூமி நிலையாக இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற கோப்பர் நிக்கஸ் கருத்தினை யார் தன்னுடைய ஆய்வுகள் மூலம் நிரூபித்தார் - கலிலியோ.
* கி.பி.1609ஆம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் - கலிலியோ
* சூரிய ஒரு விண்மீன்; நிலவு கோளவடிவம் கொண்டது என கண்டுபிடித்தவர் - கலிலியோ.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: ஆற்றலின் வகைகள்: அறிவியல் வினா - விடை
ஆற்றலின் வகைகள்:
* வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல்
* வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
* ஆற்றலின் அலகு - ஜூல்
* தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்
* வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல்
* வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
* ஆற்றலின் அலகு - ஜூல்
* தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: செல்லின் அமைப்பு: அறிவியல் வினா - விடை
செல்லின் அமைப்பு:
* உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் கொண்டது - செல்
* நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்
* செல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665
* செல்லை முதன் முதலில் பார்த்தவரும், பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்
* உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் கொண்டது - செல்
* நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்
* செல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665
* செல்லை முதன் முதலில் பார்த்தவரும், பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: காந்தவியல்: அறிவியல் வினா - விடை
காந்தவியல்:
* காந்தத்தால் கவரப்படுவது - இரும்பு, நிக்கல், கோபால்ட்
* காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
* வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
* தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்
* காந்தத்தால் கவரப்படுவது - இரும்பு, நிக்கல், கோபால்ட்
* காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
* வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
* தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அளவீடுகளும் இயக்கமும்:அறிவியல் வினா - விடை
அளவீடுகளும் இயக்கமும்:
* தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடு எனப்படும்.
* தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு - அலகு எனப்படும்.
* பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
* தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடு எனப்படும்.
* தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு - அலகு எனப்படும்.
* பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: பொருள்களைப் பிரித்தல்: அறிவியல் வினா - விடை
பொருள்களைப் பிரித்தல்
* பல வாயுக்கள் சேர்ந்த கலவை - காற்று
* நாம் வாங்கும் உணவுப் பொறுள்களில் கலப்படம் இல்லாதவை என்பதை உறுதி செய்யும் முத்திரை - அக்மார்க் முத்திரை
* நிறம், அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களை பிரித்தல் - கையால் தெரிந்தெடுத்தல்
* பல வாயுக்கள் சேர்ந்த கலவை - காற்று
* நாம் வாங்கும் உணவுப் பொறுள்களில் கலப்படம் இல்லாதவை என்பதை உறுதி செய்யும் முத்திரை - அக்மார்க் முத்திரை
* நிறம், அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களை பிரித்தல் - கையால் தெரிந்தெடுத்தல்
Subscribe to:
Posts (Atom)