உலக பல்கலைகளின் விவாத சாம்பியன்ஷிப் போட்டியை, டிசம்பர் 28ம் தேதி
முதல், அடுத்தாண்டு ஜனவரி 3ம் தேதி வரை, சென்னை தண்டலத்திலுள்ள ராஜலட்சுமி
கல்வி நிறுவனம் நடத்தவுள்ளது.
உலக பல்கலைக்கழகங்களின் விவாத கவுன்சில், இப்போட்டியை, ராஜலட்சுமி கல்வி
நிறுவனத்தில் நடத்தும் முடிவை எடுத்துள்ளது. இப்போட்டிக்கு, பிரிட்டன்,
அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, கனடா, ரஷ்யா,
ஸ்காட்லாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், செர்பியா,
தென்ஆப்ரிக்கா, தென்கொரியா, ஸ்வீடன், வெனிசுலா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட
பல்வேறு நாடுகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மொத்தம் 380 அணிகள் இப்போட்டிக்காக பதிவு செய்துள்ளன. மற்றபடி,
நடுவர்கள் உள்ளிட்ட, சுமார் 1500 நபர்கள் இப்போட்டியின்போது கூடுவார்கள்
என்று கூறப்படுகிறது.
டிசம்பர் 28ம் தேதி தொடங்கும் இப்போட்டியில், 31ம் தேதி break - out
சுற்றும், அதற்கடுத்து, அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுகள் நடைபெறும்.
வெற்றி பெற்றவர்களின் விபரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும்.
இறுதி முடிவுகள், வழக்கமான சம்பிரதாயப்படி, இரவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment