"குழந்தைகள் பாதிக்கப்படும் இடமெல்லாம், நலக்குழும உறுப்பினர்கள்
உடனடியாக செல்ல முடியாது. எனவே கல்லூரி மாணவர்களை கொண்ட தன்னார்வ குழுக்களை
உருவாக்க வேண்டும்" என மதுரையில் நடந்த மாநில குழந்தைகள் நலக் குழுமத்
தலைவர்களுக்கான கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
சிறார் நீதிச் சட்டத்தில்
குழந்தைகள் உரிமைகள் குறித்து, வக்கீல் கீதா பேசியதாவது: சிறார்
நீதிச்சட்டமானது 2000க்கு முன் வரை, குழந்தைகளை குற்றவாளிகளாக பார்க்கும்
அமைப்பாக, குழந்தைகள் குரல் கொடுக்க முடியாத அமைப்பாக இருந்தது. தற்போது
அந்த பார்வை மாறியுள்ளது. பெற்றோரிடம் சொல்ல முடியாத விஷயங்களைகூட,
குழந்தைகள் பயமின்றி குழந்தைகள் நலக் குழுமத்தில் தெரிவிக்கலாம்.
குழந்தைகள் பாதிக்கப்படும் இடமெல்லாம் நலக்குழும உறுப்பினர்கள் உடனடியாக
செல்ல முடியாது. எனவே, கல்லூரி மாணவர்களை கொண்ட தன்னார்வ குழுக்களை
உருவாக்க வேண்டும். அவர்களுக்கு சிறார் நீதிச்சட்டம், நலக்குழும
செயல்பாடுகளை பயிற்சியாக தரவேண்டும்.
புறச்சூழலால் பாதிக்கப்படும் குழந்தைகள் தைரியமாக சொல்ல முன்வந்தாலும்,
பெற்றோர் பின்வாங்குவதால் பிரச்னைகள் வெளியே வருவதில்லை. அவற்றை முறையாக
கையாளவும் முடிவதில்லை. எனவே, குழந்தைகள், பெற்றோர்களுக்கு "கவுன்சிலிங்"
செய்து தவறிழைத்தவர்களை, சட்டத்திற்குள் கொண்டு வரவேண்டும். அதற்கான
சுதந்திரமான அமைப்புதான், குழந்தைகள் நலக் குழுமம்.
பள்ளி, வீடுகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன.
அவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்றார். மாநில அமைப்பாளர்
ஜிம்ஜேசுதாஸ், நிர்வாகிகள் நம்பி, ஆண்ட்ரூ ஜேசுராஜ் உட்பட பலர்
பங்கேற்றனர்.
No comments:
Post a Comment