நாடு முழுவதுமுள்ள 100 பொறியியல் கல்லூரிகள், புதிய பாட அட்டவணைக்கு
மாறவுள்ளன. இதன்படி, பாதியளவு பாடங்கள் ஐ.ஐ.டி பேராசிரியர்களால்
"விர்ச்சுவல்" முறையில் கற்பிக்கப்படவுள்ளன.
இந்தியாவின் பல பொறியியல் கல்லூரிகளில், சிறந்த முறையிலான ஆசிரியர் -
மாணவர் கலந்துரையாடல் நடைபெறவும், உயர் தரமுள்ள பாட உள்ளடக்கங்களை
மேற்கொள்ளவும் வேண்டி, இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக
தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்தின் முதல் கட்ட செயல்பாடு, அதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட 100
பொறியியல் கல்லூரிகள், புதிய செமஸ்டரை தொடங்குவதால், அடுத்தாண்டு ஜனவரி 2ம்
தேதி துவங்குகிறது.
இத்திட்டத்தின்படி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங்,
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் கணிதம் உள்ளிட்ட 9 பாடங்களில், ஐ.ஐ.டி.,
பேராசிரியர்கள் மற்றும் வழக்கமான வகுப்பறை பயிற்சி ஆகிய இரண்டு முறைகளில்
பயிற்சி பெறுவார்கள்.
No comments:
Post a Comment