Global Ethics Forum என்ற மாநாட்டை, ஐ.ஐ.எம்., பெங்களூர் வரும் ஜனவரி மாதம் 3 - 5 தேதிகளில் நடத்துகிறது.
2014ம் ஆண்டிற்கான மாநாட்டின் தலைப்பு "Equal in an unequal world - the
value of values in responsible businesses" என்பதாகும். நெறிமுறை வணிகம்
மற்றும் கார்பரேட் பொறுப்பில், சிறந்த செயல்பாடுகளை வெளிக்காட்டுதல்,
பொறுப்புள்ள தலைமைத்துவத்தில் மதிப்பீடுகளை உயர்த்துதல் மற்றும் வணிகம்
மற்றும் சமூகத்தை மாற்றுவதில் உள்ள சமமின்மையை களைவதில் அவர்களின்
பங்களிப்பு ஆகிய விஷயங்களின்பால் இந்த மாநாடு கவனம் செலுத்துகிறது.
இம்மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர், விண்ணப்ப படிவத்திற்கு log on
செய்து, பதிவு செய்யவும். இதற்கு பதிவுசெய்ய கடைசித் தேதி டிசம்பர் 20.
முந்தி வருபவர்களுக்கு முதல் வரிசை என்ற முறையில், நபர்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
No comments:
Post a Comment