சீனாவில் அடுத்தாண்டு கல்லூரிப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 7.27
மில்லியனாக (70 லட்சத்திற்கும் மேல்) இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால், வேலை வாய்ப்பு சந்தையில் பெரும் சிக்கல் உருவாகும் நிலை உள்ளது.
அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம், மாணவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்
என்னவெனில், "பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள், நாட்டின் பெரிய
நகரங்களுக்கு வேலைதேடி சென்று சிரமங்களை சந்திப்பதைவிட, நடுத்தர அளவுள்ள
நகரங்களில் பணி வாய்ப்புகளைத் தேடுவது நல்லது.
மேலும், அந்த பட்டதாரிகள், அடிப்படை நிலையிலான நிறுவனங்களில் பணி
வாய்ப்புகளைத் தேடலாம். அவர்கள் பொதுத்துறை அல்லாத நிறுவனங்களில் சேர்ந்து
பணிபுரிவதன் மூலமாக, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, அதன்மூலம் தனியார் துறை
பொருளாதாரத்தை சிறப்பாக்க முடியும்" என்று தெரிவிக்கிறது.
சீனாவின் உள்நாட்டு அரசாங்க அமைப்புகள், அதிகளவிலான பட்டதாரிகளை பணிக்கு
அமர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் பட்டதாரிகள்
தங்களுக்கான சொந்த தொழிலை தொடங்குவார்கள். மேலும், அதற்கான அனுமதி
வழங்கும் நடைமுறையை எளிதாக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment