தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மன கழகத்தின், நாமக்கல் அடுத்த
தத்தாத்திரிபுரம் மின்வாரிய அலுவலகம் சார்பில், ஏளூர் அரசு மேல்நிலைப்
பள்ளி மாணவர்களிடையே, மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வார விழா
நடந்தது.
தத்தாத்திரிபுரம் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
மாணவரிடையே, மின்சிக்கனம் குறித்த பேச்சு, கட்டுரை போட்டிகள்
நடத்தப்பட்டது. அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும்
பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. நாமக்கல் செயற்பொறியாளர் துரைசாமி,
பள்ளியின் தலைமை ஆசிரியர் வரதப்பன், புதன்சந்தை உதவிசெயற்பொறியாளர் முருகன்
உட்பட பலர் பங்கேற்றனர்.
களங்கானி மின்வாரிய அலுவலகம் சார்பில், களங்கானி ஆதிதிராவிடர் நல அரசு
மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே, மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வார
விழா நடந்தது.
No comments:
Post a Comment