"நடப்பு கல்வி ஆண்டில், பொதுத்தேர்வு எழுதவுள்ள, அரசு பள்ளி மாணவர்கள்,
100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும்" என ஆசிரியர்களுக்கு, கலெக்டர்
தட்சிணாமூர்த்தி அறிவுரை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி
ஆசிரியர்களுக்கு, நேற்று, புத்தாக்கப் பயிற்சி நடந்தது. மாவட்ட கலெக்டர்
தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
கடந்த, 2013ம் ஆண்டில் நடந்த, எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2
பொதுத்தேர்வில், அரசு பள்ளிகளில், எஸ்.எஸ்.எல்.ஸி.,யில், 113 பள்ளிகள்,
ப்ளஸ் 2 வில், 36 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. அடுத்தாண்டு
நடக்கவுள்ள, பொதுத் தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில் படிக்கும் அரசுப்
பள்ளி மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சியைப் பெற வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.
கற்றல் குறைபாடு மற்றும் பொதுத் தேர்வை சந்திக்க அச்சப்படும் மாணவர்களை
அடையாளம் கண்டு, அவர்களை தேர்ச்சியடைய வைப்பது, ஒவ்வொரு ஆசிரியரின் தலையாய
கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment