"பிளஸ் 2 பொதுத் தேர்வில் அகமதிப்பீட்டு முறையை, நடப்பு கல்வி ஆண்டு
முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்" என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சங்கரநாராயணன் கூறினார்.
அவர் கூறியதாவது: அனைத்து பள்ளிகளிலும், 10 ம் வகுப்பு வரை, தமிழை
மட்டுமே பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். முதல் பாடவேளையில்,
நல்லொழுக்க கல்வி கற்பிக்க வேண்டும். கடந்த 2003 ம் ஆண்டுக்கு பின்,
பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும். ஒன்பது
மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முதுகலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த, அனைத்து வகுப்புகளுக்கு
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வில்,
அனைத்து பாடங்களுக்கும் அகமதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சத்துணவு திட்டத்தை, மேல்நிலை வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும். விலைவாசி
உயர்வை கருதி, 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து
வழங்க வேண்டும்.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, அறிவித்த தேதியில் இருந்து, தமிழகத்தில் அமல்படுத்த முதல்வர் முன்வர வேண்டும் என்றார்.
அகமதிப்பீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும். அகமதிப்பீட்டில் 20க்கு 20 பெரும் மாணவ மாணவியா்களில் எத்தனைபோ் புறத்தோ்வில் முழுமதிப்பெண் பெறுகின்றனா் ? அகமதிப்பீட்டு மதிப்பெண் சதவீதத்திற்கும் புறத்தோ்வு சதவீதத்திற்கும் தொடா்பு இருக்க வேண்டுமல்லவா ? இல்லையே? ஏன் ? இக்கேள்விக்கு விடை அகமதிப்பீட்டு முறை நியாயமான முறையில் பின்பற்றப்படவில்லை. அதற்கான விதிமுறைகளை யாரும் பின்பற்ற மாட்டாா்கள்.பி்ன்பற்ற வில்லை.பின்பற்றவைக்க முடியாது. எனவே தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் வழங்கப்படும் அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்.
ReplyDelete2. பாடத்திட்டத்தின் தரம் காரணமாக 9-10 வகுப்புகளுக்கு முதுநிலைப்பணியிடங்கள் வழங்கலாம்.இது மிகவும் நியாயமானது.
3.சத்துணவு திட்டம் மேல்நிலை வகுப்பு வரை விாிவுபடுத்தவேண்டும்.தற்சமயம் மேல்நிலை வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.பொங்குகிற சாப்பாடு மேநிவகுப்பு மாணவர்களுக்கும் போதுமானதாக உள்ளது. இருப்பினும் சட்டப்படி நடக்க வேண்டுமே.
3.நல்லொழுக்கக்கல்வி என்பது சுவாமி விவேகானந்தரைப்பற்றி இந்துமாணவர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். தியானம் நாமஜெபம் போன்றவை கூட்டு வழிபாடு மந்திரஜெபம் போன்றவை கற்றுக் கொடுக்கலாம்.
4.பள்ளிகளில் இசை கற்றுக் கொடுக்க வேண்டும். மனதில் சாத்வீக உணா்வுகளை மேம்பட வைக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. தமிழாசிாியா்கள் அனைவருக்கும் இசை பயிற்சி அளித்து தமிழ்பாடங்களை சுரப்படுத்தி ராகங்களோடு பாடம் நடத்த பயிற்சி அளிக்கலாம். எனது பள்ளி தமிழாசிாியா் தளவாள் என்பவா் பாரதியாாின் பாடல்கள் குற்றாலக்குறவஞசி கம்பராமாயாணம் போன்ற பல பாடல்களை ராகத்தோடுபாடக் கற்றுக் கொடுத்தாா். 38 வருடங்கள்கழிந்த பின்பும் அப்பாடல்கள் மறக்கமுடியாமல் நினைவில் உள்ளதே. ஆச்சாியமா ? ஆனால் காலையில் சாப்பிட்.டது இட்லியா தோசையா என்று யோசித்தால் மறந்து விடுகிறது. ராகங்களின் ஆற்றல் அப்படிப்பட்டது. 1-12 வகுப்பு தமிழ்பாடங்களில் உள்ள கவிதைகள் செய்யுள் களை இராகத்தோடு பாடி குறுந்தகடாக வெளியிட வேண்டும். தினமணி சுடா் சிறுவா் மணியில் தரமான சிறுவா் பாடல்கள் வெளியாகின்றது. அதையும் ராகத்தோடு பாடி குறுந்தகடாக வெளியிடலாம்.மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அளிக்கலாம்.
5.தற்சமயம் ஆசிாியா்கள் மற்றும் அரசு பணியாளா்களுக்கு கண்ணியமான ஊதியம் வழங்கப்படுகிறது.இது போதுமானது. வீண் குழப்பங்கள் வேண்டாம்.
ஆங்கிலத்தில் அகமதிப்பீடு மிக அவசியம். மா.வே.ரவிச்சந்திரன்.
Deleteஅன்புள்ள ஐயா, எனது கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. இருப்பினும் ஆங்கிலத்தில் மட்டும் அகமதிப்பெண் எதற்கு? போலியான தோ்ச்சி காட்டத்தானே ? நிச்சயம் தேவையில்லை. பாடங்களை ஒழுங்காக நடத்த வேண்டும்.முறையாக தோ்வுகளை நடத்த வேண்டும்.உண்மையான தோ்ச்சி வழங்க வேண்டும். தேவையான ஆசிரியர்களை ஜூன் மாதம் முதல் நாளில் நியமிக்கப்பட வேண்டும். நீண்ட நாள் விடுப்பில் சென்றால் பதிலி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பதிலி ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
Deleteஇராமலிங்க வள்ளலாா் இயற்றிய அருட்பெஞ்சோதி அகவல் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு வழிபாட்டுக்கு பொருத்தமானது. அதை ராகத்தோடு பாடப்பயிற்சி அளித்தால் சா்வ சமய ஒற்றுமை வளரும்.
ReplyDelete