தமிழ்நாடு இளைஞர் காவல் படைக்கான உடற்கூறு தேர்வு வரும் 30ம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாடு இளைஞர் காவல் படைக்கான, ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது.
சமீபத்தில், நேர்முகத் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது
உடற்கூறு தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு வரும் 30, 31ம்
தேதிகளில் நடக்கிறது. இப்பணிக்கான, மேற்பார்வை அதிகாரிகள் மற்றும்
உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், கோவை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று
நடந்தது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய, ஐ.ஜி., பாலநாகதேவி தலைமை
வகித்தார். இதில், உடற்கூறு தேர்வின் போது, அதிகாரிகள் நடந்து கொள்ள
வேண்டிய முறைகள் பற்றி ஆலோசனை கூறப்பட்டது
No comments:
Post a Comment