சேலம் கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் கூடுதலாக 650 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 35 வயதுக்குள் இருக்க
வேண்டும். அலுவலக வேலை நேரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், நேரடியாகவோ
அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்கலாம்.
நாளை(23ம் தேதி) முதல் 31ம் தேதி வரை விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து, ஊராட்சி அலுவலகத்தில் வழங்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு
2,000 ரூபாய் தொகுப்பூதியம், 40 ரூபாய் அகவிலைப்படி வழங்கப்படும்.
மூன்றாண்டுகளுக்கு பின் இப்பணியிடம் சிறப்பு காலமுறை ஊதியம்
பெறும் பணியிடமாக உயர்த்தப்படும். 3,000க்கு கீழ் மக்கள் தொகை உள்ள
ஊராட்சிக்கு ஒரு பணியாளரும், 10 ஆயிரம் வரை மக்கள் உள்ள ஊராட்சிக்கு,
இரண்டு பணியாளரும், அதற்கு மேல் உள்ள ஊராட்சிக்கு, மூன்று பேரும்
நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment