9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2014ம் ஆண்டு மார்ச்
மாதம் இறுதி தேர்வுகளில், திறந்த புத்தக தேர்வுக்காக 30 நிமிடங்கள்
கூடுதலாக வழங்க CBSE முடிவு செய்துள்ளது.
பிரதான கேள்வித்தாளுடன், வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம், Open Text
Based Assessment (OTBA) எனும் திறந்த புத்தக தேர்வு, புதிதாக
சேர்க்கப்படவுள்ளது. எனவே, இதனை எழுதுவதற்காக, கூடுதல் நேரம்
வழங்கப்படுகிறது.
எனவே, வழக்கமாக வழங்கப்படும் 3 மணிநேரம் என்பதை 3.30 நிமிடமாக
வழங்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக CBSE தெரிவித்துள்ளது.
அதேசமயம், கேள்வித்தாளை படித்து பார்ப்பதற்காக வழங்கப்படும் 15 நிமிட நேரம்
என்பது தனி.
No comments:
Post a Comment