கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், பள்ளிக்
குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. பல
பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து
போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
pack
:
பள்ளிகளில் செயல்படாத "அன்னையர் குழு":மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எச்சரிக்கை
கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார், மெட்ரிக் பள்ளிகளில் " அன்னையர்
குழு" செயல்படுவது இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வேதியியல் படிக்காத மாணவர்களும் பயன்பெற ஏ.ஐ.சி.டி.இ புதிய ஆலோசனை
மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களின்
பிளஸ் 2 படிப்பில், வேதியியல் பாடத்தை படிக்காவிட்டாலும், அவர்கள் தங்களின்
விருப்பத்தை நிறைவேற்ற தடையில்லாதவாறான ஒரு புதிய நடைமுறையைக் கொண்டுவர
ஏ.ஐ.சி.டி.இ., ஆலோசனை வழங்கியுள்ளது.
கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அதிர்ச்சி
கணிதம், தொழில்நுட்பத் துறை தொடர்பான கல்வியில் அமெரிக்கர்களை முந்தும்
அளவுக்கு இந்தியர்களும், சீனர்களும் கடுமையான உழைப்பை
வெளிப்படுத்துகின்றனர். உலகமயச் சூழலில் வேலை வாய்ப்புகள் எந்த
நாட்டுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, அதை எதிர்கொள்ள அமெரிக்கக்
கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர்
ஒபாமா கூறியுள்ளார்.
மாநில தனித்திறன் போட்டிகள்: பார்வையாளர்களை கவர்ந்த பள்ளி மாணவர்கள்
நெல்லையில் மாநில அளவிலான தனித்திறன் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் திறம்பட பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தனர்.
கிராமப்புற இளைஞர்களுக்கு 4 சக்கர வாகன ஓட்ட இலவச பயிற்சி முகாம்
தமிழக அரசு மகளிர் திட்டத்தின் சார்பில் கிராமப்புற
இளைஞர்களுக்கு 4 சக்கர வாகனம் ஒட்டுவதற்கான இலவச பயிற்சி முகாம் நெல்லை
சிட்டி டிரைவிங் பயிற்சி பள்ளியில் நடைபெறவுள்ளது.
குரூப் 1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்
தமிழகத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்1 தேர்வு முடிவுகள் 3
மாதத்திற்குள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்
நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அனுமதி
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள்
சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; அதற்காக கெசட்டட்
அதிகாரிகளை அணுகத் தேவையில்லை என, மத்திய மனித வளத் துறை அறிவித்துள்ளது.
சீரழியும் மாணவர் சமுதாயம்: மது குடித்து விட்டு பள்ளியில் தகராறு செய்த மாணவர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுபானம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
"வரலாற்று பாடம் வெறுக்கத்தக்க பாடமல்ல"
"வரலாற்று பாடம் வெறுக்கத்தக்க பாடமல்ல
என்பதை இளைய தலைமுறைக்கு எடுத்து கூறவே இந்த கண்காட்சியை நடத்துகிறோம்"
என்று நாணயக் கண்காட்சி நடத்தும் "பயிற்று" அமைப்பின் நிர்வாகிகள் கூறினர்.
பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரமான உணவுகள்: கலெக்டர் வேண்டுகோள்
"பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள உணவுக் கூடங்களில் மாணவ,
மாணவியருக்கு சுகாதாரமான, தரமான உணவு வழங்கவேண்டுமென" கலெக்டர் ஹரிஹரன்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடைகள் எழுதுங்கள்: மாணவர்களுக்கு அறிவுரை
கூடலூரில் நேற்று மதியம் 1:00 மணிக்கு துவங்கிய பிளஸ் 2
மாணவர்களுக்கான "ஜெயித்துக்காட்டுவோம்" நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்
தேர்வில் வெற்றி பெற கோவை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த
"டிப்ஸ்" விபரம்:
மாணவர்களை வேலை வாங்கும் ஆசிரியர்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மாணவர்களை டீ மற்றும் சாப்பாடு வாங்க அனுப்பும் ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
கல்விக் கடனுக்கு லஞ்சம் கேட்ட வங்கி மேலாளருக்கு சிறை
கல்விக்கடன் வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என
அடம்பிடித்த சென்ட்ரல் பாங்க்., மேலாளர் ஒருவர் சி.பி.ஐ., போலீசாரால் கைது
செய்யப்பட்டார்.
பள்ளி ஆங்கில வழி வகுப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி
வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என அறிவுறுத்தப்
பட்டுள்ளது.
அரசு பள்ளியில் முதல் வகுப்பு மற்றும்
6ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தூதுவளை சூப், சோயா, சுண்டல்,...
கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை டிசம்பரில் துவங்க
அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
புதிய தேர்வு மையங்கள்: தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை செக்
வரும், மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு
பொதுத் தேர்வுகளையொட்டி, புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில்
தேர்வுத்துறை கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒரு தேர்வு
மையத்திற்கு அருகே புதிய தேர்வு மையத்திற்கு அனுமதி வழங்க முடியாது என
தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
"மாணவர்களுக்கு அறிவு மதம் பிடிக்க வேண்டும்"
"மாணவர்களுக்கு அறிவு மதம் பிடிக்க வேண்டும். அப்படி அறிவு
மதம் பிடித்தால் மட்டுமே அத்தனை பாடங்களும் மாணவர்களுக்கு கட்டுப்படும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற்று சாதனை
படைக்கலாம்," என பெரியகுளத்தில் நடந்த "தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்"
நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களின் வெற்றியே ஆசிரியர்களின் வெற்றி
"மாணவர்களின் வெற்றியே ஆசிரியர்களின் வெற்றியாகும்" என
உடுமலையில் நடந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு
ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு சத்தான உணவோடு மருத்துவப் பரிசோதனை
"விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு
முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதோடு, சத்தான உணவு வகைகளை வழங்க
வேண்டும்," என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரசு முதன்மை செயலர்
அறிவுறுத்தினார்.
பாடப்புத்தகங்கள் நல்ல மாணவரை உருவாக்குமா?
மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) சார்பில்
அதன் பாடத் திட்டத்தை நடத்தும் பள்ளி முதல்வர்களுக்கான சிறப்புப்
பயிலரங்கு, மதுரையில் மூன்று நாட்களுக்கு நடந்தது.
குழந்தை தொழிலாளருக்கு கல்வி: கலெக்டர் ஆவல்
"குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி அறிவை வளர்க்க வேண்டும்," என, கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
மதுரையில் நடந்த குழந்தைகள் பாதுகாப்பு, வளர்ச்சி கருத்தரங்கில் கலெக்டர் சுப்ரமணியன் பேசியதாவது:
பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பு வகுப்புகளில் பயன்படுத்த உத்தரவு
பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்கள், "ஆப்சென்ட்" ஆவதை
தவிர்க்கும் பொருட்டு, விடுமுறை நாட்களில், அவர்களை சிறப்பு வகுப்புகள்
எடுக்க, பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.41 கோடி அரசு ஒதுக்கீடு
ஆறு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி
பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு, 2012-13, 13-14ம் கல்வி
ஆண்டுக்கு, ரூ.41 கோடியை சிறப்பு கட்டணமாக (ஸ்பெஷல் பீஸ்) அரசு ஒதுக்கீடு
செய்துள்ளது.
மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண்: மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
பிளஸ் 2 தேர்வில் மறு கூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவரை கலெக்டர் பாராட்டினார்.
பி.ஏ., ஆங்கிலபடிப்பு அரசாணை வெளியீடு
மதுரை காமராஜ் பல்கலையில், பி.ஏ., ஆங்கிலம் (தொழில் சார்ந்த படிப்பு)
மற்றும் பி.ஏ., ஆங்கிலம்(இலக்கியம்) என, 2 பட்டப்படிப்புகள் உள்ளன.
இந்தியாவில் 21 போலி பல்கலைகள்: உ.பி.,யில் மட்டும் 9
இந்தியாவில், 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக, பல்கலை
கழக மானியக்குழு அறிவித்துள்ளது. மாணவர்கள் இதில் சேர்ந்து ஏமாற வேண்டாம்,
எனவும் எச்சரித்துள்ளது.
மாவட்ட பாஸ்போர்ட் மையங்கள் மூடல்: இணையதளத்தில் இனி விண்ணப்பிக்கலாம்
மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஸ்போர்ட் மையங்களில், வரும், 21ம் தேதி முதல், விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகளை துவக்க வேண்டும்: தருமை ஆதீனம்
பள்ளி, கல்லூரிகளில் நீதிபோதனை வகுப்புகளை துவக்க வேண்டும்
என பாளை.,யில் நடந்த சைவ சபை முப்பெரும் விழாவில் தருமை ஆதீனம் குமாரசாமி
தம்பிரான் சுவாமிகள் பேசினார்.
திறன் எய்தும் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு
நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும்
அவர்களின் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு திறன் எய்தும், பயிற்சி
அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம், என மாவட்ட தொழிலாளர்
அலுவலர் கேட்டு கொண்டார்.
160 நூலகங்களுக்கு 1.50 லட்சம் புத்தகங்கள்: உறுப்பினர்களாக சேர்வதில் மாணவர்கள் ஆர்வம்
சேலம் மாவட்ட மைய நூலகத்துக்கு 500க்கும் மேற்பட்ட
பதிப்பகங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒன்றரை லட்சம் புத்தகம்
நூலகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
முதல்வர் அறிவிப்பிற்கு தடை போடுகிறதா டி.ஆர்.பி.,?
டி.ஆர்.பி.,யில், ஒவ்வொரு தேர்வு முடிவும், பெரும் இழுவைக்குப் பிறகே
வெளியாகிறது. ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை, இரண்டரை
மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல் இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு
முடிவும் வெளியாகவில்லை.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.
"உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை... வெற்றியின் மந்திரங்கள்"
மாணவர்களுக்கு உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை மிக முக்கியம்;
திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம்" என, மேட்டுப்பாளையத்தில் தினமலர்
நாளிதழ் சார்பில் நேற்று நடந்த, "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில்,
ஆசிரியர்கள் அறிவுரை கூறினர்.
ஒரே மாதத்தில் 11 நாட்கள் விடுமுறை அரசு ஊழியர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி
அக்டோபரில் மட்டுமே 11 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், ஆசிரியர், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பள்ளி மாணவியருக்கு இலவச விடுதி வசதி
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ், சேலம்
மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ள மாணவியர் விடுதிகளில் சேர்க்கை நடந்து
வருகிறது.
மாவட்ட கேரம் போட்டி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கேரம் போட்டிகள் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
தட்டச்சு குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த யோசனை
ஈரோட்டில், மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.
பள்ளி கல்வித் துறையில், மேலும் பல முக்கிய முடிவுகள், கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை கல்வி
அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி
ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான,சிறப்பு ஆய்வு
கூட்டம், சென்னையில் அக்.,17,18, தேதிகளில் நடக்கிறது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளில், தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப்
பாடத்தேர்வுக்கு மறுதேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் மறுதேர்வு
நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், உத்தரவை
எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு
வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர்
நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது.
Subscribe to:
Posts (Atom)