வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலம் உதவித் தெகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பெறாதோருக்கு ரூ.100ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.150ம், பிளஸ்2
தேர்ச்சிக்கு ரூ.200ம், டிகிரி தேர்ச்சிக்கு ரூ.300ம்,
மாற்றுத்திறனாளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300ம், பிளஸ்2
தேர்ச்சிக்கு ரூ.375ம், டிகிரி தேர்ச்சிக்கு ரூ.450ம் மாதந்தோறும் உதவித்
தொகையாக வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, செப்.30ம் தேதி வரை 5 ஆண்டுகள்
தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஓராண்டு
பூர்த்தி அடைந்திருந்தால் போதும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45
வயதுக்குள்ளும், மற்ற பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் படித்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50ஆயிரத்திற்குள்
இருக்க வேண்டும். வேறு எந்த நிதியுதவியும் பெற கூடாது.
பள்ளி, கல்லூரிகள் படிப்பவராக இருத்தல் கூடாது. தகுதியுள்ளவர்கள் கல்வி
சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் வந்து மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை நவ.30க்குள் அளிக்க வேண்டும். ஏற்கனவே, உதவித் தொகை
பெறுபவர்கள் நவ.30க்குள் சுயஉறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்,
என்றார்.
No comments:
Post a Comment